×

ஆக்சிஜன் வேணும்னா என் கூட உறவு வச்சிக்கணும்..அதிரவைக்கும் டுவிட்டர் பதிவு

கொரோனா தொற்று பாதித்தவர்கள் என்றும் தெரிந்தும், கொரோனா ஒரு பெருந்தொற்று என்றும் தெரிந்துகூட அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனா கொடுங்காலத்திலும் இப்படியும் கொடுமையா என்று பேசி வரும் நிலையில், அடக்கொடுமையே என்று சொல்ல வைத்திருக்கிறது இளம்பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு ஒன்று. கொரோனா இரண்டாவது அலையில் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். தொற்றின் தீவிரத்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது.
 

கொரோனா தொற்று பாதித்தவர்கள் என்றும் தெரிந்தும், கொரோனா ஒரு பெருந்தொற்று என்றும் தெரிந்துகூட அவர்களிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட அதிர்ச்சி செய்திகள் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனா கொடுங்காலத்திலும் இப்படியும் கொடுமையா என்று பேசி வரும் நிலையில், அடக்கொடுமையே என்று சொல்ல வைத்திருக்கிறது இளம்பெண் ஒருவரின் டுவிட்டர் பதிவு ஒன்று.

கொரோனா இரண்டாவது அலையில் கொத்து கொத்தாக உயிரிழந்து வருகின்றனர். தொற்றின் தீவிரத்தாலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பினாலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நாடு முழுவதும் நிலவி வருகிறது. ஆக்சிஜனுக்காக நோயாளிகளின் உறவினர்கள் அலையும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.

அப்படித்தான் அந்த இளம்பெண்ணும் தன் தந்தையின் கொரோனா தொற்று பாதித்து மூச்சு விடமுடியாமல் திணறிக்கொண்டிருந்தபோது, தந்தைக்காக ஆக்சிஜன் கேட்டு அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்திருக்கிறார்.

இதைக்கவனித்த பக்கத்து அபார்ட்மெண்டில் இருந்தவர், தன்னிடம் ஆக்சிஜன் சிலிண்டர் இருக்கிறது. வேண்டுமா? என்றுகேட்க, தந்தையின் உயிரை காப்பாற்றப்போகிறோம் என்ற மகிழ்ச்சி்யில் அவரின் பின்னே ஓடியிருக்கிறார். அந்த நபரின் பிளாட்டிற்கு சென்றதும், ‘’நான் உன் அப்பாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தருகிறேன். அதற்கு பதிலாக நீ என்னுடன் செக்ஸ் வச்சிக்கணும்’’ என்று சொல்ல, அந்த இளபெண் அதிர்ந்து போயிருக்கிறார்.

ஆக்சிஜன் வேணும்னா என் கூட உறவு வச்சிக்கணும் என்று அந்த நபர் கறாராக சொல்ல, அழுதபடியே திரும்பியிருக்கிறார் அப்பெண். நடந்த சம்பவத்தை தோழியிடம் சொல்ல, ஊர் பெயர் சொல்லாவிட்டாலும், இப்படிப்பட்ட நேரத்திலும் இப்படிப்பட்ட நபர்களும் இருக்கிறார்கள் என்பதை தெரி்யப்படுத்த, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அந்த நபரின் ஊர், பெயர், போட்டோ போட்டு அசிங்கப்படுங்க சகோதரி என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.