×

சாலையில் விழுந்த சடலம்:கொரோனா அவலம்

கொரோனா முதல் அலையின்போது பிரேசில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிந்ததால் சுடுகாடு கிடைக்காமல் சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. அந்த அவலம் இப்போது இந்தியாவிலும் நிகழுகின்றன. இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவிலும் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிகின்றன. அப்படிப்பட்ட உடல்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எரிக்கப்படுகின்றன. ஒரு பாலத்தின் கீழ் ஆற்று மணலில் பிணங்களை வரிசையாக அடுக்கி வைத்து எரிக்கும் வீடியோ வெளியாகி பெரும்
 

கொரோனா முதல் அலையின்போது பிரேசில், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிந்ததால் சுடுகாடு கிடைக்காமல் சடலங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எரிக்கப்பட்ட அவலம் நிகழ்ந்தது. அந்த அவலம் இப்போது இந்தியாவிலும் நிகழுகின்றன.

இரண்டாவது அலையின் தீவிரத்தால் இந்தியாவிலும் கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிகின்றன. அப்படிப்பட்ட உடல்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து எரிக்கப்படுகின்றன. ஒரு பாலத்தின் கீழ் ஆற்று மணலில் பிணங்களை வரிசையாக அடுக்கி வைத்து எரிக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்களில் எரியூட்டுவதற்காக சடலங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. சடலங்களை சுமந்துவரும் ஆம்புலன்ஸ்கள் வரிசையில் நிற்கின்றன. இப்படிப்பட்ட அவலத்தை பார்த்த பின்னர்தான் கொரானாவின் முதல் அலைக்கு பயப்படாதவர்கள் கூட இரண்டாவது அலைக்கு பதற்றத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் மத்தியபிரதேச மாநிலத்தில் விடிசா எனும் பகுதியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை மருத்துவமனை நிர்வாகம் தகனம் செய்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் அந்த மருத்துவமனை நிர்வாகம் இறந்த உடல்களை ஒரு ஆம்புலன்சில் அடுக்கி வைத்து கொண்டுசென்ற மயானத்திற்கு கொண்டு செல்லப்படும் வழியில், சாலையில் ஆம்புலன்சில் பக்கவாட்டு கதவு திடீரென உடைந்து கொண்டு சடலம் ஒன்று சாலையில் கீழே விழுந்தது.

இதைப் பார்த்த சாலையில் செல்வோர் அதிர்ச்சி அடைந்து ஓடிவந்தனர். அதற்குள் சாலையில் சென்றோர் பலர் சத்தம் போடவே இதை கவனித்து விட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுனரும் ஆம்புலன்சை நிறுத்தி விட்டு வருகிறார். இந்த சம்பவத்தை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர் அது வைரலாகி பொதுமக்கள் பலரும் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.