×

பிரபல இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவர் கொரோனாவால் மரணம்

பிரபல இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ஸ்ராவன் ராத்தோட்(66) கொரோனாவால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.15 மணிக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார். 90களில் பாலிவுட் திரை உலகை கட்டி ஆண்டவர்கள் இரட்டை இசையமைப்பாளர்கள் நதிம் -ஸ்ராவன். இவர்கள் இருவரும் ராஜா இந்துஸ்தானி, தில் ஹே மாந்தா நஹின், ஆஷிக்கி, தட்கன், பூல் அவுர் காண்டே, பர்தேஸ், சடக், தீவானா உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ஹிட் பாடல்களை தந்தார்கள். மெலடி பாடல்களை அதிகம் தந்து ரசிகர்களை
 

பிரபல இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ஸ்ராவன் ராத்தோட்(66) கொரோனாவால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.15 மணிக்கு மும்பை தனியார் மருத்துவமனையில் காலமானார்.

90களில் பாலிவுட் திரை உலகை கட்டி ஆண்டவர்கள் இரட்டை இசையமைப்பாளர்கள் நதிம் -ஸ்ராவன். இவர்கள் இருவரும் ராஜா இந்துஸ்தானி, தில் ஹே மாந்தா நஹின், ஆஷிக்கி, தட்கன், பூல் அவுர் காண்டே, பர்தேஸ், சடக், தீவானா உள்ளிட்ட படங்களின் மூலம் ஏராளமான ஹிட் பாடல்களை தந்தார்கள். மெலடி பாடல்களை அதிகம் தந்து ரசிகர்களை கவர்ந்தனர்.

உதித் நாராயணன், அல்கா யாக்னிக், குமார் சானு போன்ற பாடர்களில் இவர்களின் இசையில் பிரபலம் ஆனார்கள்.

இரட்டை பிரபலங்களில் ஸ்ராவன் ராத்தோட், பல்வேறு உடல் உபாதைகளினால் அவதிப்பட்டு வந்தார். இதில் கொரொனாவும் வந்ததால் அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10.15 மணிக்கு உயிரிழந்தார்.

ஸ்ராவன் ராத்தோட் மரணத்திற்கு இசை ரசிகர்களூம், பாலிவுட் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.