×

இன்று முதல் முழு ஊரடங்கு

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு பல மாநிலங்கள் அமல்படுத்தி இருக்கிறது. மேலும் வார இறுதி நாள் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்றைக்கு இரவு 8 மணியிலிருந்து தொடங்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 1ஆம் தேதி
 

கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இரவு நேர ஊரடங்கு பல மாநிலங்கள் அமல்படுத்தி இருக்கிறது. மேலும் வார இறுதி நாள் முழு ஊரடங்கு அமல் படுத்தி இருக்கின்றது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று முதல் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இன்றைக்கு இரவு 8 மணியிலிருந்து தொடங்கும் இந்த ஊரடங்கு மே மாதம் 1ஆம் தேதி வரைக்கும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் நேற்றைக்கு மட்டும் ஒரே நாளில் 67 ஆயிரத்து 468 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒரேநாளில் 168 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் முழு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது. இந்த முழு நேர ஊரடங்கில் திருமண விழாக்கள் மண்டபத்தில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நடக்கக்கூடாது என்றும், 25 நபர்களுக்கு மேல் விழாக்களில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 50,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அவசர கால அல்லது அத்தியாவசிய சேவைகளுக்கு தவிர மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அரசு அலுவலகங்கள் 15 சதவிகித ஆட்களுடன் செயல்படுவதற்கும், அரசு பேருந்துகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு அனுமதி அளித்தும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

முழு ஒத்துழைப்பு அளித்து அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே அன்றி பிற நேரங்களில் யாரும் வெளியே வரவேண்டாம் என்று அம்மாநில அரசு கேட்டுக் கொண்டிருக்கிறது
. அரசு அலுவலர்கள் மருத்துவத் துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது மற்றபடி மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் இருந்து ஒரு பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து அரசுக்கு ஒத்துழைக்குமாறு அம்மாநில முதல்வர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.