×

மணமகன் தாடி வைத்திருந்தால்.. பரபரப்பை ஏற்படுத்திய பஞ்சாயத்து தீர்மானம்

வருடக்கணக்கில் முடி திருத்தம் செய்யாமலும், முகச்சவரம் செய்யாமலும் இருந்தாலும் கூட, திருமணத்தின் போது கட்டாயம் முடி திருத்தம், முகச்சவரம் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது முடி திருத்தம், முகச்சவரம் செய்யாமலேயே திருமணம் செய்து கொள்வது இளைஞர்களின் ஸ்டைலாக மாறி வருகிறது. இது நமது பாரம்பரியத்திற்கு ஏற்றது அல்ல. அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது. பஞ்சாயத்தில் சொல்லப்பட்ட தீர்ப்புதான் என்ன? புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர்
 

வருடக்கணக்கில் முடி திருத்தம் செய்யாமலும், முகச்சவரம் செய்யாமலும் இருந்தாலும் கூட, திருமணத்தின் போது கட்டாயம் முடி திருத்தம், முகச்சவரம் செய்து விடுவார்கள். ஆனால் தற்போது முடி திருத்தம், முகச்சவரம் செய்யாமலேயே திருமணம் செய்து கொள்வது இளைஞர்களின் ஸ்டைலாக மாறி வருகிறது. இது நமது பாரம்பரியத்திற்கு ஏற்றது அல்ல. அதனால் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று மீனவ கிராமத்தில் பஞ்சாயத்து நடந்திருக்கிறது.

பஞ்சாயத்தில் சொல்லப்பட்ட தீர்ப்புதான் என்ன?

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய வழக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென்று மீனவ பஞ்சாயத்தார் கூட்டம் போட்டனர். அக்கூட்டத்தில் நமது பாரம்பரிய பண்பாட்டின் படி திருமண நிகழ்ச்சியின்போது மணமகன் தாடி வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. பழைய பண்பாட்டு பாரம்பரியத்தை நிலைநிறுத்த வேண்டும். அதனால் இனிவரும் காலங்களிலாவது திருமணத்தின் போது மணமகன் தாடி வைத்திருக்கக்கூடாது. அதிகம் முடி வைத்திருக்க கூடாது. அப்படி மணமகன் தாடி வைத்திருந்தால், அதிக முடி வைத்திருந்தால் அந்த திருமண விழாவை எல்லோரும் புறக்கணித்துவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

தாடி வைத்திருந்தால் என்ன? வைக்காவிட்டால் என்ன? இதெல்லாம் ஒருவரின் தனிப்பட்ட விஷயம். அவரின் ஸ்டைல் சம்பந்தப்பட்ட விஷயம். அது அவரவர் இஷ்டம் என்று கடந்து போகாமல், அதை முக்கியமாக எடுத்துக்கொண்டு, அதற்காகவே ஒரு பஞ்சாயத்து கூட்டம் நடந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பது அப்பகுதியில் மட்டுமல்லாமல் காரைக்கால் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.