×

விறகு மாதிரி ஆட்டோவின் மேல் ஏற்றிச்செல்லப்படும் சடலம்: பிரதமர் தொகுதியின் அவலம்

உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் சர் சுந்தர் லால் மருத்துவமனையில் இருந்து இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவின் மேல் விறகு கட்டுகளை வைத்து கட்டுவது மாதிரி கட்டி சென்றிருக்கிறார்கள் உறவினர்கள். பிரதமர் மோடி தொகுதியில்தான் இப்படிப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. சாலையில் ஆட்டோவின் பின்னால் சென்ற சிலர் இந்த அவலத்தினை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது. ‘இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?’என்று நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றன. இந்த வீடியோவினை தனது டுவிட்டர்
 

உத்தரபிரதேசம் மாநிலத்தின் வாரணாசியில் சர் சுந்தர் லால் மருத்துவமனையில் இருந்து இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஆட்டோவின் மேல் விறகு கட்டுகளை வைத்து கட்டுவது மாதிரி கட்டி சென்றிருக்கிறார்கள் உறவினர்கள்.

பிரதமர் மோடி தொகுதியில்தான் இப்படிப்பட்ட அவலம் அரங்கேறி இருக்கிறது. சாலையில் ஆட்டோவின் பின்னால் சென்ற சிலர் இந்த அவலத்தினை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது வைரலாகி வருகிறது.

‘இதுதான் டிஜிட்டல் இந்தியாவா?’என்று நெட்டிசன்கள் கொந்தளிக்கின்றன.

இந்த வீடியோவினை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி,’’நரேந்திரமோடியின் வாரணாசி தொகுதியிலேயே நிலமை இதுதான். இவர்கள் கையில்தான் இந்த மோசமான சூழலில் இந்த தேசத்தை காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது என்பதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது’’என்று தெரிவித்திருக்கிறார்.