×

இறந்து போன கோழிகளுக்கு இறுதிச்சடங்கு: பாசக்கார சிறுவன்

கோழிகளைப் பார்த்தால் பலருக்கும் பிரியாணி ஞாபகம் தான் வரும். சிக்கன் -65 ஞாபகமும் வரத்தான் செய்யும். ஆனால் ஒரு சிறுவன் இறந்துபோன கோழிகளுக்காக இறுதிச்சடங்கு நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அருகே உள்ளது துட்லி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள், வான்கோழிகள், நாட்டுக் கோழிகளையும் வளர்த்து வருகிறார். இவைகளுடன் பாலகிருஷ்ணாவின் மகன் மவுனேஷ் பாசமாக பழகி வந்துள்ளான். ஆடு, மாடு, கோழிகளுடன்
 

கோழிகளைப் பார்த்தால் பலருக்கும் பிரியாணி ஞாபகம் தான் வரும். சிக்கன் -65 ஞாபகமும் வரத்தான் செய்யும். ஆனால் ஒரு சிறுவன் இறந்துபோன கோழிகளுக்காக இறுதிச்சடங்கு நடத்திய நெகிழ்ச்சியான சம்பவம் நடந்திருக்கிறது.

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அருகே உள்ளது துட்லி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள், வான்கோழிகள், நாட்டுக் கோழிகளையும் வளர்த்து வருகிறார். இவைகளுடன் பாலகிருஷ்ணாவின் மகன் மவுனேஷ் பாசமாக பழகி வந்துள்ளான்.

ஆடு, மாடு, கோழிகளுடன் அவன் பாசமாக பழகி வந்ததை போலவே அவைகளுடன் சிறுவனும் பாசமாக பழகி வந்துள்ளான். இந்த நிலையில் கோபாலகிருஷ்ணா வளர்த்து வந்த கோழிகள் திடீரென்று அடுத்தடுத்து உயிரிழந்தன. இதைப்பார்த்த சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறான் சிறுவன்.

பின்னர் சிறுவன், அவனது தந்தை கோபாலகிருஷ்ணா உதவியுடன் இறந்துபோன கோழிகளுக்கு இறுதிச் சடங்கு செய்து தோட்டத்தில் குழி தோண்டி அடக்கம் செய்து இருக்கிறான். கோழிகள் புதைக்கப்பட்ட இடத்தில் மாலைகள் அணிவித்து பால் ஊற்றியும் வழிபாடு நடத்தி இருக்கிறான்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்திருக்கிறது.