×

இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் பிரதமர்

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அன்று கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர், நாட்டுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள
 

முதல் அலையினை காட்டிலும் கொரோனா இரண்டாம் நாட்டில் வேகமாக பரவி வரும் நிலையில் பிரதமர் நரேந்திரமோடி இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி அன்று கோவாக்சின் முதல் தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் மோடி இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் கோவாக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர், நாட்டுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கொரோனாவில் இருந்து தப்பித்துக்கொள்ள தடுப்பூசி ஒன்றுதான் வழி. ஆகவே, தகுதி உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தியாவில் இதுவரைக்கும் 9 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.