×

கர்நாடகாவில் 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு 

 

 கர்நாடகாவில் புதிதாக 24 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர். 

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பெரும்பான்மையுடன் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.  இதையடுத்து அக்கட்சியின் முதலமைச்சராக கட்சியின் சார்பில் மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்.  கடந்த 20ஆம் தேதி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்றார்.  ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்த நிலையில் துணை முதலமைச்சர்  டி.கே. சிவகுமார் பதவி ஏற்றார். இதை தொடர்ந்து பரமேஷ்வரா, முனியப்பா, கே.ஜி.ஜார்ஜ், எம்.பி.பாட்டீல் , சதீஷ் ஜார்கோலி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்நிலையில் கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 24 எம்எல்ஏக்கள் இன்று பதவி ஏற்கின்றனர்.  பெங்களூருவில் உள்ள ராஜ்பவன் கண்ணாடி மாளிகையில் இன்று காலை 11:45 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.  இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மகாதேவப்பா, எச்.கே.பாட்டில், மது பங்காரப்பா பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.