×

மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர்! அசத்தும் பாஜக

அதிமுக அரசு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது போலவே உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளி்த்திருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி அன்று புதுச்சேரி மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல்-6ம் தேதி அன்றே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் -திமுக கூட்டணி்யினரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், புதுச்சேரி
 

அதிமுக அரசு மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் கொடுத்தது போலவே உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளி்த்திருக்கிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 6ம் தேதி அன்று புதுச்சேரி மாநிலத்திற்கும் தேர்தல் நடைபெறுகிறது. 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல்-6ம் தேதி அன்றே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் -திமுக கூட்டணி்யினரும், என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான பாஜக கூட்டணி கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் -2021க்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் ஆகியோருடன் மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலும் இணைந்து தேர்தல் அறிக்கையினை வெளியிட்டனர்.

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கப்படும் என்பது அந்த அறிக்கையின் கவர்ச்சியான அறிவிப்பாக இருக்கிறது.

மழலையர் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவசக்கல்வி வழங்கப்படும் என்றும், கொரோனா காலத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன் தள்ளூபடி செய்யப்படும் என்றும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் 5 லட்ச ரூபாய் வழங்கப்படும் என்றும் வாக்குறுதிகளை அளித்திருக்கிறது.