×

‘’வெங்காயத்தை மட்டுமல்ல, ஏழைகளையும் பார்த்திராதவர் நாட்டின் நிதியமைச்சர்’’

இது ஏழைகளுக்கான அரசு என்கிறார் நிர்மலா சீதாராமன். அதற்கு, ‘’ஆமாம், பரம ஏழைகளான அதானி, அம்பானிகளுக்கான அரசு. அதை பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வில் காணலாம்’’ என்கிறார் அரசியல் விமர்சகர் அருணன். அவர் மேலும், ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டினால் மாநில அரசுகள்தான் அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்கிறார் ஒரு சங்கி. மோடி அரசு மட்டும் அவற்றின் மீதான வரியை உயர்த்தி கொண்டே போகுமாம்! அம்பானிகளின் லாபம் குறையாதபடி தினசரி விலைகளை
 

இது ஏழைகளுக்கான அரசு என்கிறார் நிர்மலா சீதாராமன். அதற்கு, ‘’ஆமாம், பரம ஏழைகளான அதானி, அம்பானிகளுக்கான அரசு. அதை பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வில் காணலாம்’’ என்கிறார் அரசியல் விமர்சகர் அருணன்.

அவர் மேலும், ‘’பெட்ரோல், டீசல் விலை உயர்வை சுட்டினால் மாநில அரசுகள்தான் அவற்றின் மீதான வரியை குறைக்க வேண்டும் என்கிறார் ஒரு சங்கி. மோடி அரசு மட்டும் அவற்றின் மீதான வரியை உயர்த்தி கொண்டே போகுமாம்! அம்பானிகளின் லாபம் குறையாதபடி தினசரி விலைகளை உயர்த்த அனுமதிக்குமாம்! ஆனால் ஏழைகளின் அரசு இது!’’என்கிறார்.

டிஜிட்டல் பணவர்த்தனை ஏழைகளுக்குமானது என்று நிர்மலா சீதாராமன் சொன்னதற்கும், ’’தெருவோர மளிகைகடையில் கணக்கு வைத்திருக்கும் ஏழைகளுக்கு எதற்கு டிஜிட்டல்?வேண்டியது பணமே. வெங்காயத்தை மட்டுமல்ல, ஏழைகளையும் பார்த்திராதவர் நாட்டின் நிதியமைச்சர்!’’என்று சாடியிருக்கிறார் அருணன்.