×

இந்திய பாதுகாப்புக்கு இலங்கை ஏற்படுத்தும் அச்சுறுத்தல்; மக்களவையில் ரவிக்குமார் எம்.பி பரபரப்பு

இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை இலங்கை அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி, மக்களவையில் ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியது பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஜனவரி 18-ம் தேதி இலங்கை அமைச்சரவை சீன திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கக்கடலில் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகியவற்றில் அமைய உள்ள இந்தத் திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. சீன நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள இந்தத் திட்டம் அமையவுள்ள தீவுகள் இந்திய எல்லையில் இருந்து
 

இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை இலங்கை அரசு ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறி, மக்களவையில் ரவிக்குமார் எம்.பி ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் வழங்கியது பரபரப்பினை ஏற்படுத்தி இருக்கிறது.

கடந்த ஜனவரி 18-ம் தேதி இலங்கை அமைச்சரவை சீன திட்டம் ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. வங்கக்கடலில் நயினாதீவு, நெடுந்தீவு, அனலைதீவு ஆகியவற்றில் அமைய உள்ள இந்தத் திட்டம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது. சீன நிறுவனத்தால் நடத்தப்படவுள்ள இந்தத் திட்டம் அமையவுள்ள தீவுகள் இந்திய எல்லையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளன.

இந்தத் திட்டத்தை அனுமதிப்பதன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை இலங்கை அரசு ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து விவாதிக்க அவை அலுவல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று ரவிக்குமார் எம்.பி இன்று மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.