×

கர்நாடகாவின் ஆன்மிக அரசியல் தமிழகத்திற்கு வேண்டுமா? அருணன்

பசுவதை தடை சட்ட மசோதாவை கர்நாடக அரசு இன்று அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இச்சட்டத்தின்படி பசுக்களை கொல்ல முடியாது. வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். இச்சட்டத்தினை மீறினால்7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் 13 வயதுக்கு உட்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி சாப்பிட
 

பசுவதை தடை சட்ட மசோதாவை கர்நாடக அரசு இன்று அமல்படுத்தியது. இந்த அவசர சட்டத்திற்கு கவர்னர் வஜூபாய் வாலா ஒப்புதல் வழங்கி இருக்கிறார். இச்சட்டத்தின்படி பசுக்களை கொல்ல முடியாது. வயதான மாடுகளை வளர்க்க முடியாவிட்டால் கோசாலைகளில் விட்டுவிட வேண்டும். இச்சட்டத்தினை மீறினால்7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் 13 வயதுக்கு உட்பட்ட எருமை மாடுகளை கொல்ல உரிய முன் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது. மாட்டிறைச்சி சாப்பிட தடை இல்லை என்றும் அறிவித்திருக்கிறது கர்நாடக அரசு.

காங்கிரஸ், ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவற்றை எல்லாம் மீறி இந்த சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது கர்நாடக அரசு.

இதனால், ‘’வயதான மாடுகளையும் கொல்ல கூடாது எனும் சட்டம் கர்நாடகாவில் அமுல். மீறினால் 7ஆண்டு சிறை! அந்த மாடுகளை அரசு பார்த்துக் கொள்ளுமாம்! மக்கள் தரும் வரிப்பணத்தில் பயனற்ற கிழட்டுமாடுகள் வளர்ப்பு! பாஜக ஆட்சி என்றால் பொளாதாரம் நாசம். இந்த “ஆன்மிக அரசியல்” தமிழகத்திற்கு வேண்டுமா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் சிபிஎம் மூத்த தலைவர் அருணன்.

பயனற்ற கிழட்டு மாடுகள் என்று கூறியதால், அருணனின் வயதையும் ஒப்பிட்டு பலரும் கண்டனக்குரல் எழுப்பி வருகிறார்கள்.