×

20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி! அசத்தும் கேரள அரசு!! 

கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப உலகில் இணைய சேவை மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றாகவே மாறி விட்டது. தகவல்களை முழுமையாகவும் உடனுக்குடன் பெறவும் மக்கள் இணையத்தை நாடுகின்றனர். தமிழகத்திலும் 1,815 கோடி செலவில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப்
 

கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது

கேரளாவில் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் 20 லட்சம் குடும்பங்களுக்கு இலவச இணையதள வசதி அளிக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

இன்றைய தொழில்நுட்ப உலகில் இணைய சேவை மக்களின் வாழ்வாதாரத்தில் ஒன்றாகவே மாறி விட்டது. தகவல்களை முழுமையாகவும் உடனுக்குடன் பெறவும் மக்கள் இணையத்தை நாடுகின்றனர். தமிழகத்திலும் 1,815 கோடி செலவில் அனைத்து கிராமம் மற்றும் நகர்ப் புறங்களில் அதிவேக இணைய சேவையை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

 

 

இந்நிலையில் கேரளாவில் 1,548 கோடி ரூபாய் மதிப்பில் 20 லட்சம் குடும்பங்களுக்கு இணையதள வசதி இலவசமாக அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவில் இணையதள இணைப்பு அனைத்து தரப்பு மக்களுக்கும் அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்காக கேரளா பைபர் ஆப்டிக் நெட்வொர் என்ற திட்டத்திற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி  2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.