துயர சம்பவம்! பயிற்சியில் ஈடுபட்டிருந்த 2 ஜெட் விமானங்கள் மோதி விபத்து
Jan 28, 2023, 11:56 IST
மத்திய பிரதேச மாநிலத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படையை சேர்ந்த இரண்டு ஜெட் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் இருந்து புறப்பட்டு சென்ற விமானப்படையை சேர்ந்த இரண்டு ஜெட் விமானங்கள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தன. அப்போது எதிர்பாராத விதமாக இரண்டு விமானங்களும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் இரண்டு விமானங்களும் கீழே விழுந்து தீப்பிடித்து எரிய தொடங்கின. விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன ஆனது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை.