×

2.5 லட்சம் பரிசோதனை கருவி வர இரண்டு நாள் ஆகும்! – ஐ.சி.எம்.ஆர் அதிர்ச்சி தகவல்

கொரோனா நோயைக் கண்டறிய பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் 2.5 லட்சம் பரிசோதனை கருவி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோயைக் கண்டறிய பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் 2.5 லட்சம் பரிசோதனை கருவி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருப்பது அதிர்ச்சியை
 

கொரோனா நோயைக் கண்டறிய பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் 2.5 லட்சம் பரிசோதனை கருவி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோயைக் கண்டறிய பரிசோதனைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் 2.5 லட்சம் பரிசோதனை கருவி வர இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டிவிட்டது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு வேகத்தில் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஒன்றை இலக்கத்திலிருந்தது, இரண்டுக்கு மாறியது, 100, 200 என்று நொண்டியடித்துக் கொண்டிருந்தது திடீரென்று 2000, ஆனது… ஒரு சில நாட்களில் அது 4000ஐ தாண்டியுள்ளது. 

கொரோனா அறிகுறிகள் தென்படாதவர்களுக்குக் கூட கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது. எனவே, கொரோனா வருவதற்கு வாய்ப்புள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யுங்கள் என்று எதிர்க்கட்சிகள், மருத்துவர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர். ஆனால், போதுமான மருத்துவ ஆய்வு கருவிகள் இல்லாத நிலையில் அரசு மிக அத்தியாவசிய தேவை உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. அரசின் இந்த செயலே கொரோனா எண்ணிக்கையை அதிகரித்துவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை கருவிகள் எப்போது கிடைக்கும் என்று தேசிய மருத்துவ ஆராய்ச்சி கழக தலைவரிடம் கேட்டபோது, “5 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்-க்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 2.5 லட்சம் கொரோனா பரிசோதனை கிட் வருகிற 8 அல்லது 9ம் தேதி டெலிவரி ஆகிவிடும்” என்று கூறியுள்ளார். கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில் பரிசோதனை கிட் இன்னும் கைக்கு வரவில்லை என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.