×

இவர்களுக்கு சொந்தமான அனைத்து வாகனங்களுக்கும் இனிமேல் டோல்கேட்டில் இலவசம்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதிலும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது. இவர்களின் வாகனங்களில் எல்லாம் ’பூஜ்ஜிய பரிவர்த்தனை’ பாஸ்டேக் இருக்கும். அதுபோலவே இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லைதான். ஆனால், மாற்றுத்திறனாளிக்குரிய வண்டிகளில் வந்தால்தான் கட்டணம் இலவசம். மற்ற வாகனங்களில் வந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இனிமேல் மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்திருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் இலவசம்தான். கடந்த 2011
 

நாடாளுமன்ற உறுப்பினர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள், தலைமை செயலாளர்கள், மத்திய செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா முழுவதிலும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் கிடையாது. இவர்களின் வாகனங்களில் எல்லாம் ’பூஜ்ஜிய பரிவர்த்தனை’ பாஸ்டேக் இருக்கும். அதுபோலவே இனி மாற்றுத்திறனாளிகளுக்கும் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கும் சுங்கச்சாவடிகளில் கட்டணமில்லைதான். ஆனால், மாற்றுத்திறனாளிக்குரிய வண்டிகளில் வந்தால்தான் கட்டணம் இலவசம். மற்ற வாகனங்களில் வந்தால் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், இனிமேல் மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக வைத்திருக்கும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் இலவசம்தான்.

கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் மொத்தம் 2.7 கோடி மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். இவர்களில் வாகனம் வைத்திருப்போருக்கு நிச்சயம் பூஜ்ஜிய பரிவர்த்தனை பாஸ்டேக் உண்டு.