☰
×

ராகுல்,பிரியங்காவை கடத்தத் திட்டமா? சோனியா காந்தி வெளியிட்ட பகீர் தகவல்!

 

1984-ல் ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் நடவடிக்கைக்குப் பிறகு, தனது குடும்பத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது. அப்போது உறைவிடப் பள்ளிகளில் படித்து வந்த ராகுல், பிரியங்கா இருவரையும் கடத்த சதி நடப்பதாக உளவுத்துறை எச்சரித்ததாக பிரதமர் இந்திரா காந்தி கூறியுள்ளார். 

ஆபரேஷன் ப்ளூ ஸ்டாரைத் தொடர்ந்து, ராகுல் காந்தியையும் பிரியங்கா காந்தியையும் கடத்த சதித்திட்டம் தீட்டப்பட்டதாக உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்ததை அடுத்து, அவர்கள் கல்விப் பருவத்தின் நடுவிலேயே உறைவிடப் பள்ளிகளிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டு டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர் என்று, அவர்களின் தாயாரும் முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவருமான சோனியா காந்தி, தனது ' பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்' என்ற சுயசரிதையில் எழுதியுள்ளார் . முன்னாள் உளவுத்துறைத் தலைவரும், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாப்பு ஆலோசகருமான ஆர்.என். காவ், உறைவிடப் பள்ளிகளில் குழந்தைகளை இனி பாதுகாக்க முடியாது என்று எச்சரிக்கை விடுத்ததை அடுத்து படிப்பைப் பாதியிலேயே நிறுத்தி, இருவரையும் டெல்லிக்கு அழைத்து வந்தோம் என்றும் சோனியா காந்தி தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.