×

இரண்டு கட்சிகள் வெளியேறியும் கோயபல்ஸ் பரப்புரையை வெட்கமில்லாமல் தொடர்வது கேவலம்…வி.சி.க.

கூட்டணியில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய பின்னரும் வெட்கமில்லாமல் கோயபல்ஸ் பரப்புரையை வெட்கமில்லாமல் செய்வது கேவலம் என்று பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார் வன்னி அரசு. மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்து, சிரோமணி அகாலிதளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியும்(ஆர்.எல்.பி.) விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது. ஆர்.எல்.பி. கட்சிக்கு மக்களவையில் இருந்த ஒரே ஒரு எம்.பியான ஹனுமான் பெனிவாலும் விலகிவிட்டார்.
 

கூட்டணியில் இருந்து இரண்டு கட்சிகள் வெளியேறிய பின்னரும் வெட்கமில்லாமல் கோயபல்ஸ் பரப்புரையை வெட்கமில்லாமல் செய்வது கேவலம் என்று பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார் வன்னி அரசு.

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்து, சிரோமணி அகாலிதளம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், ராஷ்ட்ரீய லோக்தந்திரிக் கட்சியும்(ஆர்.எல்.பி.) விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டது.

ஆர்.எல்.பி. கட்சிக்கு மக்களவையில் இருந்த ஒரே ஒரு எம்.பியான ஹனுமான் பெனிவாலும் விலகிவிட்டார்.

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னி அரசு, வேளாண் சட்டங்களை எதிர்த்து ஒருபக்கம் விவசாயிகளின் போராட்டம் இன்றோடு 32 நாட்களாக தொடர்கிறது. கூட்டணியிலிருந்து ஒவ்வொரு கட்சியாக மறுபக்கம் வெளியேறுகிறது. ஆனாலும் மக்களை ஏமாற்றுவதிலேயே தங்களது கோயபல்ஸ் பரப்புரையை வெட்கமில்லாமல் தொடர்வது தான் கேவலம் என்று தெரிவித்துள்ளார்.