×

உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி… ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த கோவா..

கோவாவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி உள்பட தளர்வுகளுடன் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது. நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை. கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க.
 

கோவாவில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி உள்பட தளர்வுகளுடன் ஜூலை 19ம் தேதி வரை ஊரடங்கை அம்மாநில அரசு நீட்டித்துள்ளது.

நம் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. மேலும் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப தொடங்கியுள்ளனர். அதேசமயம் ஊரடங்கு முழுமையாக நீக்கப்படவில்லை.

கோவா முதல்வர் பிரமோத் சாவந்த்

கோவாவில் பிரமோத் சாவந்த் தலைமையிலான பா.ஜ.க. அரசு ஊரடங்கை இம்மாதம் 19ம் தேதி நீட்டித்துள்ளது. அதேசமயம் சில தளர்வுகளையும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது. உடற்பயிற்சி கூடங்களை மீண்டும் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதேசமயம் 50 சதவீத திறனில் மட்டுமே இயங்கலாம் என நிபந்தனை விதித்துள்ளது. விளையாட்டு அரங்குகளை பார்வையாளர்கள் இல்லாமல் பயன்படுத்தலாம்.

லாக்டவுன்

அதேசமயம், மாநிலத்தில் கடைகள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை திறக்க அனுமதி கிடையாது. ஸ்பா, மசாஜ் பார்லர்கள் செயல்பட தடை. பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு மண்டலங்கள் திறப்பதற்கான தடை தொடர்ந்து நீடிக்கிறது. மருத்துவ சிகிச்சைக்காக கோவாவுக்குள் வருபவர்கள் அதற்கான ஆதாரங்களுடன் வர வேண்டும். பஸ்கள் 50 சதவீத இருக்கை திறனுடன் இயங்கலாம் போன்ற தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.