×

ஆல் இந்தியா ரேடியோவின் ஆயுள் முடிகிறதா?

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் இருந்து வருகிறது மத்திய அரசு. ’ஏர் இந்தியா’எனும் மத்திய அரசின் விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது. பாரத் பெட்ரோலியம் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல பொதுத்துரை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மத்திய அரசின் விமான நிறுவனம் விற்கப்பட்டதுபோல மத்திய அரசின் ஊடகமான ‘ஆல் இந்தியார் ரேடியோ’வும் மூடப்படுவதாகவும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட போவதாகவும் பரபரபப்பு தகவல்கள் எழுந்துள்ளன. இதனால் அலறியடித்த மத்திய சுற்றுச்சூழ, வனங்கள்
 

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் முயற்சியில் இருந்து வருகிறது மத்திய அரசு. ’ஏர் இந்தியா’எனும் மத்திய அரசின் விமான நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான டெண்டர் விடப்பட்டிருக்கிறது.

பாரத் பெட்ரோலியம் மற்றும் பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட பல பொதுத்துரை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

மத்திய அரசின் விமான நிறுவனம் விற்கப்பட்டதுபோல மத்திய அரசின் ஊடகமான ‘ஆல் இந்தியார் ரேடியோ’வும் மூடப்படுவதாகவும், தனியாருக்கு தாரை வார்க்கப்பட போவதாகவும் பரபரபப்பு தகவல்கள் எழுந்துள்ளன.

இதனால் அலறியடித்த மத்திய சுற்றுச்சூழ, வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ஆல் இந்தியா ரேடியோ மூடப்படுவதாகவும் வரும் செய்திகளும் பொய். தனியாருக்கு தாரை வார்க்கப்படுவதாக வரும் செய்திகளிலும் உண்மை இல்லை. குறிப்பிட்ட சில ரேடியோ நிலையங்களையும் மூடவோ, தனியாருக்கு விற்கவோ முயற்சி எதுவும் நடக்கவில்லை. வேண்டுமென்றே சிலர் இப்படி விஷம பிரச்சாரம் செய்கிறார்கள்.

உண்மை என்னவென்றால், ரேடியோ நிலையங்களை பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்கிறார்.