×

“இது புது டெக்னிக்”-86 வயசு பெரியவரிடம் 6 கோடி பணத்தை ஆட்டைய போட்ட சிறுவர்கள்

ஒரு 86 வயது பெரியவரின் 6 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை ஒரு சிறுவர்கள் கூட்டம் புது டெக்னீக்கை பயன்படுத்தி ஆட்டைய போட்ட விஷயம் போலீசையே அதிர செய்துள்ளது மத்திய டெல்லியில் வசிக்கும் 17 வயதான சிறுவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு போலியாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தினார்கள் .அவர்கள் பலருக்கு இன்சூரன்ஸ் பணம் வாங்கி தருவதாகவும் ,ப்ரீமியம் கட்டுவதாகவும் ,கடன் வாங்கி தருவதாகவும் கூறி படிக்காத முதியோர்கள் ,மற்றும் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் .
 

ஒரு 86 வயது பெரியவரின் 6 கோடி ரூபாய் இன்சூரன்ஸ் பணத்தை ஒரு சிறுவர்கள் கூட்டம் புது டெக்னீக்கை பயன்படுத்தி ஆட்டைய போட்ட விஷயம் போலீசையே அதிர செய்துள்ளது

மத்திய டெல்லியில் வசிக்கும் 17 வயதான சிறுவனும் அவனது கூட்டாளிகளும் சேர்ந்து கொண்டு போலியாக ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம் நடத்தினார்கள் .அவர்கள் பலருக்கு இன்சூரன்ஸ் பணம் வாங்கி தருவதாகவும் ,ப்ரீமியம் கட்டுவதாகவும் ,கடன் வாங்கி தருவதாகவும் கூறி படிக்காத முதியோர்கள் ,மற்றும் பெண்களை ஏமாற்றி வந்துள்ளார்கள் .


அதன் படி டெல்லியில் ஒரு 86 வயது பெரியவரின் இன்சூரன்ஸ் பாலிஸி முடிவடைந்து அதிலிருந்து அவருக்கு 6 கோடி ரூபாய் வர இருப்பதையறிந்த அந்த சிறுவர்கள் அந்த பெரியவரை தொடர்பு கொண்டார்கள் .பிறகு அவரிடம் தங்களின் இன்சூரன்ஸ் பாலிஸி முடிவடைந்து விட்டது ,அந்த பணத்தை உங்களின் அக்கௌன்ட்டுக்கு வரவு வைக்கிறோமென்று கூறி அவரின் இன்சூரன்ஸ் டாக்குமென்ட விவரங்களை வாங்கி கொண்டார்கள் .மேலும் அவரின் வங்கி கணக்கின் தஸ்தாவேஜுகளையும் வாங்கி கொண்டு,அவரின் 6 கோடி ருபாய் இன்சூரன்ஸ் பணத்தை வங்கி தங்களின் அக்கௌண்டுக்கு மாற்றிக்கொண்டார்கள் .


இதனால் இன்னும் தன்னுடைய கணக்கில் 6 கோடி ரூபாய் வராததை கண்டு அதிர்ச்சியுற்ற பெரியவர் போலிசை தொடர்பு கொண்டார் .போலீஸ் விசாரணையில்17 வயது இளைஞன் ரித்விக் பன்சால் என்ற பெயரில் 35 வங்கிக் கணக்கைத் திறந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த கூட்டத்தினை பிடித்தார்கள் .அப்போது அவர்கள் போலியாக இன்சூரன்ஸ் கால் சென்டர் நடத்தி இது போல பலரிடம் பணத்தை ஆட்டைய போட்ட விவரம் போலீசுக்கு தெரிந்தது.