×

வரலாற்றில் முதன்முறையாக…. பழங்குடியினத்தை சேர்ந்தவர் தேவசம்போர்டில் அர்ச்சகராகிறார்

வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கேரள தேவசம்போர்டில் அர்ச்சகர் ஆகிறார். கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற கேரள அரசின் ஆணையின்படி கடந்த 2017ம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். அடுத்தகட்டமாக, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 19 பேர் பகுதி நேர அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று தேவசம்போர்டு
 

வரலாற்றில் முதன்முறையாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர் கேரள தேவசம்போர்டில் அர்ச்சகர் ஆகிறார்.

கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1200க்கும் மேற்பட்ட கோவில்கள் இருக்கின்றன. அனைத்து சமூகத்தினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்ற கேரள அரசின் ஆணையின்படி கடந்த 2017ம் ஆண்டு பட்டியலினத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 36 பேர் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர்.

அடுத்தகட்டமாக, பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த 19 பேர் பகுதி நேர அர்ச்சகர்களாக நியமிக்கப்பட இருக்கிறார்கள் என்று தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்திருக்கிறார்.

இந்த 19 பேரில் 18 பேர் பட்டியலினத்தை சேந்தவர்கள். ஒருவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

கேரள தேவசம்போர்டு வரலாற்றில் பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் அர்ச்சகராவது இதுவே முதல் முறையாகும்.