×

15ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்… டோல்களில் வேகத்தடைகளை அகற்ற உத்தரவு!

வருகிற 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி டோல் வசூலிக்கும் மையங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. வருகிற 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி டோல் வசூலிக்கும் மையங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம்
 

வருகிற 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி டோல் வசூலிக்கும் மையங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது.

வருகிற 15ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் தடையற்ற போக்குவரத்தை உறுதி செய்யும்படி டோல் வசூலிக்கும் மையங்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது வருகிற 15-ம் தேதி முதல் அமலாகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, வாகனங்கள் விரைவாக டோல்பூத்தை கடக்க டோல் பிளாசாவில் ஏற்படுத்தப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்றும், ஃபாஸ்டேக் ஒட்டிய வாகனங்கள் டோலில் நிற்காத வகையில் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறையாவது ஃபாஸ்டேக் அமலாகுமா அல்லது இன்னும் நீட்டிப்பு வழங்கப்படுமா என்று தெரியாமல் டோல் மைய ஊழியர்களும் வாகன ஓட்டிகளும் குழப்பத்தில் உள்ளனர்.