×

15 லட்சம் பேர் குணமடைந்தனர் – இந்தியாவில் கொரோனா நிலவரம்

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆயினும் கொரோனா தொற்றால் உருவாகும் புதிய நோயாளிகள் அதிகமாகும் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது. கடந்த மார்ச் மாதம் தொடங்கி, கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் உச்சமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் லாக்டெளன், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன. ஆயினும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆனபோதும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், நோயிலிருந்து குணம் அடைபவர்களின் சதவிகிதம் அதிகமாகி வருவதும் ஆறுதல்
 

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆயினும் கொரோனா தொற்றால் உருவாகும் புதிய நோயாளிகள் அதிகமாகும் பட்டியலில் முதன்மையாக இருக்கிறது.

கடந்த மார்ச் மாதம் தொடங்கி, கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் உச்சமாக உள்ளது. மத்திய மாநில அரசுகள் லாக்டெளன், தனிமைப்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கின்றன.

ஆயினும் புதிய நோயாளிகள் அதிகரிப்பதைக் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. ஆனபோதும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும், நோயிலிருந்து குணம் அடைபவர்களின் சதவிகிதம் அதிகமாகி வருவதும் ஆறுதல் அளிக்கும் செய்திகளாகும்.

இன்று (ஆகஸ்ட் 10- மதியம் வரையில் நிலவரப்படி) இந்தியாவில் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைக் கடந்துள்ளது.

தீவிர பரிசோதனை, தடம் அறிந்து சிகிச்சை அளிப்பது என்ற உத்தியை நடைமுறைப்படுத்தியதால்தான் 15,35,743 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பது சாத்தியமாகியுள்ளது.

சிறந்த ஆம்புலன்ஸ் சேவைகள், தரமான சிகிச்சை அளிப்பதில் கவனம், ஆக்சிஜன் பயன்பாடு ஆகிய காரணங்களால் நோயாளிகள் குணமடைவது அதிகரித்துள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில், 54,859 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கிட்டதட்ட 70 சதவீதத்தை நெருங்கிவிட்டது.

கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 28.66 சதவீதத்தினருக்கு மட்டுமே மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. மருத்துவக் கண்காணிப்பில் (6,34,945) உள்ளவர்களைவிட அதிகமாக ஒன்பது லட்சம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி இரண்டு சதவீதமாகும், ஆனாலும், படிப்படியாக குறைந்து வருகிறது.