×

’’நாராயணசாமி நாவடக்கணும்; எடப்பாடி பழனிச்சாமி பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ளணும்’’- வையாபுரி மணிகண்டன் எச்சரிக்கை

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். ’’மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ஆதரிக்கும் தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின்
 

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடெங்கிலும் எதிர்கட்சியின் போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவித்துள்ளதற்கு தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் தமிழக அரசையும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.


’’மத்திய அரசின் விவசாய விரோத சட்டங்களை ஆதரிக்கும் தமிழக முதல்வருக்கு விவசாயிகளின் கஷ்டம் தெரியவில்லை. கார்ப்பரேட் முதலாளிகளின் கள்ள மார்க்கெட்டிற்கு தமிழக முதல்வர் ஆதரிக்கிறாரா? பதில் சொல்லட்டும்’’என்று அவர் கேள்வி எழுப்பி வருகிறார்.

நாராயணசாமியின் இந்த விமர்சனங்களுக்கு பதிலடிகொடுக்கும் விதமாக, ‘’திமுக தலைவரை திருப்திபடுத்த, நாராயணசாமிக்கு கைதேர்ந்த எத்தனையோ வழிகள் உள்ளன. அதைவிடுத்து தமிழக அதிமுக அரசை பற்றியோ, தமிழக முதலமைச்சர் பற்றியோ பேசுவதை நாராயணசாமி நாவடக்கத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் புதுச்சேரி மாநில அதிமுக தொண்டர்கள் நாராயணசாமிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டியிருக்கும்’’ என்று புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் புதுச்சேரி சட்டமன்ற அதிமுக கொறடா வையாபுரி மணிகண்டன்.

அவர் மேலும், ’’டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து தமிழக அதிமுக அரசு, விவசாயிகளின் அரசு என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆனால் இரட்டை வேட திமுகவின் ஊதுகுழலாக செயல்படும் நாராயணசாமிக்கு புதுச்சேரி விவசாயிகளின் நலனில் துளியும் அக்கறையில்லை. குறைந்தபட்சம் தமிழக அரசு போல காவிரி கடை மடை பகுதியான காரைக்காலை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என சட்டசபையில் நாங்கள் வலியுறுத்திய கோரிக்கையைக்கூட நிறைவேற்ற துணிவில்லாத, வேளாண் எதிரியான நாராயணசாமி புதுச்சேரியில் விவசாயிகள் நலனுக்காக ஒரு திட்டத்தைக்கூட செயல்படுத்தவில்லை.

விவசாயிகளைப்பற்றியோ, விவசாயத்தை பற்றியோ எந்தவித அக்கறையும் இல்லாத நாராயணசாமிக்கு தமிழக அரசைப்பற்றியோ, தமிழக முதலமைச்சர் பற்றியோ பேசுவதற்கு எந்தவித அருகதையும் கிடையாது. குறுக்கு வழியில் பதவிக்கு வந்துவிட்டு, தனது முதலமைச்சர் நாற்காலி பதவி சுகத்திற்காக, புதுச்சேரி மாநில காங்கிரசை திமுகவிடம் அடகு வைத்துவிட்ட அக்கட்சியின் தலைவரை குஷிப்படுத்த வேண்டும் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி நாராயணசாமி பேசியுள்ளதை புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்’’ என்றும் தெரிவித்துள்ளார்.