×

காரில் கடத்தப்பட்ட 1,200 மதுபாட்டில்கள்: மடக்கி பிடித்த போலீசார்!

சித்தூர் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்தப்பட்டு வந்த 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே வழக்கம் போல போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பலமநேர் பகுதியில் இருந்து சித்தூரை நோக்கி சென்ற கார் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 1,200 மதுபாட்டில்கள் இருப்பது அம்பலமானது. இதனியடுத்து காரில் வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகாவில் இருந்து
 

சித்தூர் அருகே கர்நாடகாவில் இருந்து கடத்தப்பட்டு வந்த 1,200 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் பங்காரு பாளையம் அருகே வழக்கம் போல போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பலமநேர் பகுதியில் இருந்து சித்தூரை நோக்கி சென்ற கார் ஒன்றை வழிமறித்து போலீசார் சோதனை செய்துள்ளனர். அதில் சுமார் 1,200 மதுபாட்டில்கள் இருப்பது அம்பலமானது.

இதனியடுத்து காரில் வந்த 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அந்த 2 பேர் சித்தூரை சேர்ந்த ராஜசேகர் மற்றும் பெருமால்லகுடிப்பள்ளி பகுதியை சேர்ந்த ரமேஷ் என்றும் தெரியவந்தது. போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கையிலேயே ஸ்ரீதர் அங்கிருந்து தப்பிச் சென்றார். ராஜசேகர் மட்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார். மேலும், அவர்கள் வந்த காருடன் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.