×

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

கடந்த மே மாதம் லடாக்கில் இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் இந்தியாவின் 20 வீரர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்த சீனா மீது கடும் நடவடிக்கை, தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்-களுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும் குளோன் உள்ளிட்ட 47 செயலிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தடைவிதிக்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்த ஆப்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அறிவித்த உடனேயே
 

கடந்த மே மாதம் லடாக்கில் இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதலில் இந்தியாவின் 20 வீரர்கள் பலியாகினர். இதைத் தொடர்ந்த சீனா மீது கடும் நடவடிக்கை, தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்-களுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. மேலும் குளோன் உள்ளிட்ட 47 செயலிகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை தடைவிதிக்கப்பட்டது. இந்தியாவின் பாதுகாப்பு காரணத்தைக் காட்டி இந்த ஆப்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு அறிவித்த உடனேயே கூகுள் தன்னுடைய ப்ளே ஸ்டோரில் இருந்து அந்த ஆப்களை நீக்கிவிடுகிறது. இதனால் சீன நிறுவனங்கள் ஆடிப்போய் உள்ளன.

இந்நிலையில் தற்போது பப்ஜி விளையாட்டு உள்ளிட்ட மேலும் 118 ஆப்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது