×

டெல்லியில் ஒரே நாளில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு

 

ஆகஸ்ட் 20 ஆம் தேதி டெல்லியில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 20 ஆம் தேதி டெல்லியில் 114 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 அன்று 159 புதிய இன்ஃப்ளூயன்ஸா பாதிப்புகள் பதிவாகின , அவற்றில் 114 H1N1 பாதிப்புகளாகும். இதன்மூலம் இந்த ஆண்டு  டெல்லியின் ஒட்டுமொத்த H1N1 பாதிப்புகளின் எண்ணிக்கை 1,777-ஐ எட்டியுள்ளது. 2026 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 2,602 இன்ஃப்ளூயன்சா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியுள்ளது. ஒரே நாளில் எட்டு மடங்காக பாதிப்பு அதிகரித்ததை அடுத்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா, டெல்லி சுகாதார அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் மற்றும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் டெல்லி தேசிய தலைநகரப் பிரதேச அரசின் மூத்த சுகாதார அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். மருத்துவமனைப் படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு உள்ளிட்ட டெல்லியில் உள்ள சுகாதார வசதிகளின் தயார்நிலையும் ஆய்வு செய்யப்பட்டது.