×

10,000 இல்லை 1000 மாணவர்கள் மீது தான்! அலிகார் போலீஸ் புதுத் தகவல்!

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது 1000ம்தான் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது 1000ம்தான் என்று போலீஸ்
 

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது 1000ம்தான் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழக மாணவர்கள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. ஆனால், அது 1000ம்தான் என்று போலீஸ் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டிசம்பர் 15ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை சம்பவம் அரங்கேறியது. அங்கு தொலைத் தொடர்பு சேவை முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், பல்கலைக் கழகத்தின் 10 ஆயிரம் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறியதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. 10 ஆயிரம் மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் நாடு முழுவதும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.
தற்போது, அந்த தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் பேர் மீது மட்டும்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் என்று தவறுதலாக எழுத்துப்பிழை ஏற்பட்டுவிட்டது என்று அலிகார் மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு ஆகாஷ் குல்கர்னி தெரிவித்துள்ளார்.