×

1.65 % – இந்தியாவில் கொரோனாவால் இறப்புகளின் சதவிகிதம்

இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக கொரோனா நோய்த் தொற்று பெரும் சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கான நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அம்மாத முடிவில் நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. ஆனபோதும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. கடந்த ஓரிரு வாரங்களாக இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது. நேற்று மட்டுமே அமெரிக்காவில் 31,857 பேரும், பிரேசிலில் 14,597 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில்
 

இந்தியாவில் கடந்த 6 மாதங்களாக கொரோனா நோய்த் தொற்று பெரும் சோதனைகளை ஏற்படுத்தி வருகிறது.

மார்ச் மாதத் தொடக்கத்தில் இந்தியாவில் கொரோனாவுக்கான நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அம்மாத முடிவில் நாடு முழுவதும் லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. ஆனபோதும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை.

கடந்த ஓரிரு வாரங்களாக இந்தியாவில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கிறது.

நேற்று மட்டுமே அமெரிக்காவில் 31,857 பேரும், பிரேசிலில் 14,597 பேரும் புதிய நோயாளிகளாக அதிகரித்திருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் 93,215 பேராக அதிகரித்துள்ளனர். நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவிலேயே அதிகம்.

இப்படி அச்சம் தரும் பல செய்திகள் கொரோனாவைப் பற்றி இருந்தாலும், ஆறுதலான செய்தி என்பது இந்தியாவில் கொரோனாவினால் மரணம் அடையும் சதவிகிதம் குறைவாக இருப்பதே.

இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகபட்ச எண்ணிக்கையை நேற்று தொட்டுள்ளது.

தொடர்ந்து உயர்ந்து வரும் குணமடைந்தவர்கள் விகிதம், 78 சதவீதத்தை தொட்டுள்ளது. தற்போது சிகிச்சையில் உள்ளவர்களை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சம் அதிகமாகும்.

அதிக பாதிப்புகளைக் கண்டுள்ள 5 மாநிலங்களில் இருந்து மொத்த பாதிப்புகளில் 60 சதவீதம் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 77,512 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,80,107 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 9,86,598 ஆக உள்ளது.

மத்திய அரசின் கவனம் மிகுந்த, திட்டமிட்ட & திறன்மிகு உத்திகள் அதிக குணமடைதல்களுக்கும், குறைவான இறப்பு விகிதத்துக்கும் (1.65%) காரணமாகியுள்ளன.