×

சிவகாசி நாடார் மெஸ்! சரித்திரத்தில் இடம்பெற்ற சாப்பாட்டுக்கடை??

பெயர்தான் ‘சிவகாசி நாடார் மெஸ்’! இருப்பது சங்கரன்கோவில் கடைவீதியில்.சாதி வெறியும்,தீண்டாமையும் தலைவிரித்தாடிய 1940 களில்,மிளகாய் கொள்முதல் செய்ய வரும் நாடார் இன வியாபாரிகள் சங்கரன் கோவில் உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை பெயர்தான் ‘சிவகாசி நாடார் மெஸ்’! இருப்பது சங்கரன்கோவில் கடைவீதியில்.சாதி வெறியும்,தீண்டாமையும் தலைவிரித்தாடிய 1940 களில்,மிளகாய் கொள்முதல் செய்ய வரும் நாடார் இன வியாபாரிகள் சங்கரன் கோவில் உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை. இரட்டை குவளை முறை போல வாசலில் அமரவைத்து சாப்பாடு போடுவார்களாம். அதை
 

பெயர்தான் ‘சிவகாசி நாடார் மெஸ்’! இருப்பது சங்கரன்கோவில் கடைவீதியில்.சாதி வெறியும்,தீண்டாமையும் தலைவிரித்தாடிய 1940 களில்,மிளகாய் கொள்முதல் செய்ய வரும் நாடார் இன வியாபாரிகள் சங்கரன் கோவில் உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை

பெயர்தான் ‘சிவகாசி நாடார் மெஸ்’! இருப்பது சங்கரன்கோவில் கடைவீதியில்.சாதி வெறியும்,தீண்டாமையும் தலைவிரித்தாடிய 1940 களில்,மிளகாய் கொள்முதல் செய்ய வரும் நாடார் இன வியாபாரிகள் சங்கரன் கோவில் உணவகங்களில் சாப்பிட அனுமதி இல்லை.

இரட்டை குவளை முறை போல வாசலில் அமரவைத்து சாப்பாடு போடுவார்களாம். அதை கண்டு வெகுண்டு எழுந்த முத்தையா நாடார் துவங்கிய உணவகம்தான் இந்த ‘சிவகாசி நாடார் மெஸ்’.

அரசு அதிகாரியாக இருந்த முத்தையா இந்த மெஸ்ஸை துவங்கியதும் கடும் எதிர்ப்பு கிளம்பியதான் அத்தனை பிரச்சினைகளையும் எதிர் கொண்டு நின்ற முத்தையாவின் தைரியத்துக்கும்,உறுதிக்கும் சாட்சியாக சங்கரன்  கோவிலில் மூன்றாவது தலைமுறை நிர்வாகத்தில் முக்கால் நூற்றாண்டு தாண்டி நிற்கிறது!

மதியம் 12 மணிமுதல் மாலை 5 மணிவரைதான் வியாபாரம்.இங்கே சாப்பாடு, பிரியாணி இரண்டும் உண்டு.வெளி ஆட்களை வேலைக்கு வைப்பதில்லை. சமைப்பது,பரிமாறுவது எல்லாம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே!

எந்த மசாலாவும் கடையில் வாங்குவதில்லை.மெஸ் துவங்கியபோது முத்தையாவின் மனைவி தங்கத்துரைச்சி அம்மாள் எப்படி மசாலாக்களை தயாரித்தாரோ அதே ஃபார்முலாவை அவர் பேரன்களின் காலத்திலும் பின்பற்றுவதால் 75 ஆண்டுகளாக அதே சுவையை தருகிறார்கள்.

மட்டன் பிரியாணி,நாட்டுக்கோழி பிரியாணி,சிக்கன் பிரியாணி மற்றும் சாப்பாடு,சைடிஷ்களில் இவர்களுடைய தனித்த அடையாளமாக சில ஐட்டங்கள் வைத்திருக்கிறார்கள்.உதாரணமாக மட்டன் நெய்ச்சுக்கா,பிரியாணி முதல் குழம்பு,சுக்கா அனைத்திற்கும் வெள்ளாட்டு கறி மட்டுமே பயன்படுத்துகிறார்கள். 

சமைப்பதும் கடலை எண்ணையில் மட்டுமே.இந்தக்காரணங்களால் நெய்சுக்கா பஞ்சுபோல் இருக்கிறது.ஆட்டுக்குடலில் இரண்டுவகைகள் செய்கிறார்கள். குடல் கிரேவி,குடல் ரோஸ்ட் என்று.அதில் தங்களது குடல் ரோஸ்ட்டுக்கு இணையாக தமிழகத்தில் எங்கேயுமே கிடைக்காது என்று மார்தட்டுகிறார்கள்.

இங்கே செய்யப்படும் கரண்டி ஆம்லெட்டும் சம்திங் ஸ்பெஷல்தான்.அடுத்தது மட்டன் பிரியாணி.சீரகசம்பா அரிசியில்தான் பிரியாணி செய்கிறார்கள். உங்களுக்கு வரும் பிளேட்டில் சோற்றுக்கு இணையாக மட்டனும் இருக்கும்.

உள்ளே நுழைந்த உடனே ஒரு பெரிய கண்ணதாசன் புகைப்படம் உங்கள் கண்ணில் படும்.நாடகம் போட அந்த பகுதிக்கு வந்தால் இந்த சிவகாசி நாடார் மெஸ்ஸுக்கு வந்து மட்டன் குழம்போடு சாப்பிட்டு விட்டுத்தான் மறுவேலை பார்ப்பாராம் கவிஞர் கண்ணதாசன்.இந்த உணவகத்தில் வைக்கப்படும் ரசம் கவிஞரை மிகவும் கவர்ந்துவிட்டதால் அதைப்பற்றி ஒரு கவிதையே எழுதி இருக்கிறாம்.

ஆனால் நீங்கள் அங்கே சாப்பிடப் போகும்போது ரசத்தோடு எழுந்து விடாதீர்கள்,இங்கே  தேன்கலந்து பரிமாறப்படும் தயிரை விட்டுவிடாதீர்கள்.
இடம்:- சங்கரன் கோவில,சங்கரலிங்கனார் கோவில் ஆர்ச்சுக்கு எதிரில் இருக்கிறது.