×

கேழ்வரகு களியும்,கோலா உருண்டை குழம்பும் ‘ராஜண்னா மிலிட்டரி ஹோட்டல்’ பெங்களூர் ஸ்பெஷல்…

பெங்களூரில் ‘ராஜண்னா மிலிட்டரி ஹோட்டல்’ என்ற பெயரில் பல உணவகங்கள் இருக்கின்றன.அதில் நீங்கள் தேடிப்போக வேண்டிய மாகடி ரோடில் இருக்கும் (விஜயநகர்) ‘ராஜண்னா இந்து மிலிட்டரி ஹோட்டல்’ பெங்களூரில் ‘ராஜண்னா மிலிட்டரி ஹோட்டல்’ என்ற பெயரில் பல உணவகங்கள் இருக்கின்றன.அதில் நீங்கள் தேடிப்போக வேண்டிய மாகடி ரோடில் இருக்கும் (விஜயநகர்) ‘ராஜண்னா இந்து மிலிட்டரி ஹோட்டல்’. கர்நாடக உணவு வகைகளில் மராத்தியர் பாதிப்பு அதிகம். மதுரைக்கும், வேலூருக்கும் படை நடத்திய பாதையில் இருந்ததால் அவர்களின் உணவுப் பழக்கங்கள்
 

பெங்களூரில் ‘ராஜண்னா மிலிட்டரி ஹோட்டல்’ என்ற பெயரில் பல உணவகங்கள் இருக்கின்றன.அதில் நீங்கள் தேடிப்போக வேண்டிய மாகடி ரோடில் இருக்கும் (விஜயநகர்) ‘ராஜண்னா இந்து மிலிட்டரி ஹோட்டல்’

பெங்களூரில் ‘ராஜண்னா மிலிட்டரி ஹோட்டல்’ என்ற பெயரில் பல உணவகங்கள் இருக்கின்றன.அதில் நீங்கள் தேடிப்போக வேண்டிய மாகடி ரோடில் இருக்கும் (விஜயநகர்) ‘ராஜண்னா இந்து மிலிட்டரி ஹோட்டல்’.

கர்நாடக உணவு வகைகளில் மராத்தியர் பாதிப்பு அதிகம். மதுரைக்கும், வேலூருக்கும் படை நடத்திய பாதையில் இருந்ததால் அவர்களின் உணவுப் பழக்கங்கள் கர்நாடகத்தில் வேறூன்றிவிட்டது..

இது போன்ற சிறிய உணவகங்களில்தான் நாம் பாரம்பரிய கர்நாடக உணவு சுவையை அறிய முடியும்! ராஜண்னா சிறிய உணவகம்தான்.சாமுண்டம்மா ராஜண்னாதான் நிர்வகிக்கிறார்.நீங்கள் மதிய உணவுக்கு ஒரு மணிக்கே போய்விடுவது நல்லது.

இந்த கோவிந்தராஜ் வார்டு பகுதி, நிறைய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி என்பதால் ஒருமணிக்கு மேல் கூட்டம் அதிகமாகிவிடும்.

நிறைய வெரைட்டிகள் ஒன்றும் கிடையாது! தலைக்கறி ( இதை தல மாம்ஸா என்பார்கள்,பயப்பட வேண்டாம்) குடல் குழம்பு,ஆட்டிறைச்சி,கீமா பால் கறி என்கிற கோலா உருண்டை குழம்பு,சிக்கன் கிரேவி,களி,அரிசி சோறு,ரசம் அவ்வளவுதான் மொத்த மெனுவே! ஆனால் 12 மணியிலிருந்து மூன்று மணி வரை கூட்டம் அலை மோதுகிறது.

நீங்கள் அமர்ந்ததும் இலையும் தண்ணீரும் வைத்து விட்டு,ஒரு கேழ்வரகு களி உருண்டையைக்  கொண்டுவந்து வைத்துவிட்டு ‘ஏன் பேக்கு?’ என்று தங்கள் கையிருப்புகளைச் சொல்வார்கள்.உங்கள் தேர்வைச்  சொன்னதும் அது சூடாக வரும்.களியை பிட்டு குழம்பில் முக்கி அப்படியே விழுங்க வேண்டியதுதான். 

அதை முடித்ததும் அரிசி சோறும்,ரசமும் தருவார்கள்.அவ்வளவுதான் சாப்பாடு. உங்களால் முடியும் என்றால் இன்னொரு கிரேவியும் இன்னொரு உருண்டை களியும் முயற்சித்துப் பாருங்கள்.

நீங்கள் ஒரு மணிக்கே போயிருந்தாலும் வெளியே வரும்போது காணும் காட்சி வேறாக இருக்கும்.வழியெல்லாம் டூ வீலர்களாக நிற்கும்.அதில் அமர்ந்தபடியே ஏராளமான ஆட்கள் சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள் ராஜண்னா இந்து மிலிட்டரி ஓட்டல் வாடிக்கையாளர்கள்.