கருணை கிழங்கு சாப்பிட்டால் ‘அந்த’ பிரச்சனை இருக்காது | இனி மிஸ் பண்ணாதீங்க!
கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. இன்று தெருவிற்கு நான்கைந்து மூலவியாதிகளுக்கான ஸ்பெஷல் க்ளினிக்குகள் முளைத்து விட்ட நிலையில், மூல நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ உணவாக கருணைக்கிழங்கு இருப்பது பலருக்கும் தெரியாது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் உள்ளன. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
கருணைக்கிழக்கு, சுவையிலும், மருத்துவக் குணத்திலும் சிறந்து விளங்குகிறது. இன்று தெருவிற்கு நான்கைந்து மூலவியாதிகளுக்கான ஸ்பெஷல் க்ளினிக்குகள் முளைத்து விட்ட நிலையில், மூல நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ உணவாக கருணைக்கிழங்கு இருப்பது பலருக்கும் தெரியாது. உடல் எடையை குறைக்க விரும்புவர்களும், கருணைக்கிழங்கை சாப்பிடலாம். மாங்கனீஸ், பொட்டாசியம், இரும்பு உட்பட சத்துகள் உள்ளன. கருணைக்கிழங்கு சாப்பிடுவதால், கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணப்படுத்துகின்றன. பசியை தூண்டி, இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதை முற்றிலும் குணப்படுத்த விரும்பினால், கருணைக் கிழங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர நிவாரணம் கிடைக்கும். உடல் உஷ்ண மிகுதியால் ஏற்படும் அனைத்து விதமான நோய்களில் இருந்தும் கருணைக் கிழங்கு காக்க வல்லது. அதனால் தான் அதனை கருணைக் கிழங்கு என்று அழைக்கிறோம். பெண்களின் வெள்ளைப்படுதல் உபாதைக்கு சிறந்த மருந்தாக கருணைக்கிழங்கு விளங்குகிறது. உடல் வலி இருந்தால், குணப்படுத்தக் கூடிய ஆற்றல் இருக்கிறது. சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில், கருணைக் கிழங்கு லேகியம் பிரசித்தி பெற்றது.
உடல் எடை அதிகமாகி, மூட்டுவலி உட்பட கோளாறுகளால் அவதிப்படுவோர், தினசரி அவசியம் சாப்பிட வேண்டியது கருணைக்கிழங்கு. கிழங்குகளில், சுலபமாக ஜீரணமாவதும் கூட. குடலில் கிருமி சேராமல் தடுத்து, கொழுப்பு அதிகமாக சேர்வதைக் குறைப்பது, கல்லீரலுக்குச் சுறுசுறுப்பூட்டுகிறது. உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கப் பயன்படுகிறது. ரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பைக் குறைப்பதிலும், ரத்தம் உறைதலை துரிதப்படுத்துவதிலும், கருணைக்கிழங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் எல்லா வகைகான கிழங்குகளையும் தவிர்க்க வேண்டும். ஆனாலும், கருணைக்கிழங்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாம். பெண்களின் ஹார்மோன் பிரச்னைகளைக் கூட கட்டுப்படுத்தும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் வரும் மெனோபாஸ் பிரச்னையின் போது, பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை இது அதிகப்படுத்துகிறது.
முடக்குவாதம் உள்ளவர்கள், வாரம், இருமுறை கருணைக்கிழங்கை உட்கொண்டு வந்தால், நோய் குணமாகும். வைட்டமின் “சி’ சத்தும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்டுகளும் அதிகம் உள்ளன. கருணைக்கிழங்கு, உடலை குளிரச் செய்யும் உணவு என்பதால், ஆஸ்துமா இருப்பவர்கள், முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குண்டுடல் கொடுக்கும் உருளைக்கிழங்கு, குண்டுடல் குறைக்கும் கருணைக்கிழங்கு’ என்று வாசகம் உள்ளது. சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால், நாக்கில் நமைச்சலை ஏற்படுத்தும். நன்றாக வேக வைத்து பின், தோலை உரித்து, புளி சேர்த்து சமைத்தால், அதிலுள்ள காரல் நீங்கும். அரிப்பு இருக்காது. சிலர் அரிசி கழுவிய நீரில், கருணைக்கிழங்கை வேக வைப்பதுண்டு. இதனால், காரல், நமைச்சல் கட்டுப்படும். வேகவைத்து அரைத்து மசித்த கருணை கிழங்கு, ஒரு ஸ்பூன் எடுத்து நீர்விட்டு கலக்கவும். இதனுடன் சோம்பு மற்றும் தனியா சேர்ந்த பொடி ஒரு ஸ்பூன் சேர்க்கவும். இதனுடன் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்து வர கொழுப்பு கரையும். உயர் ரத்த அழுத்தம் குறையும்.
கொழுப்பு சத்து ரத்தநாளங்களில் படிவதை கருணை கிழங்கு தடுக்கிறது. நச்சுக்களை வெளியேற்றும் நல்மருந்தாக விளங்குகிறது. கருணைக்கிழங்கை பயன்படுத்தி அல்சரை குணப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். வேகவைத்த கருணை கிழங்கை மசித்து ஒரு ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன், 2 ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நெஞ்செரிச்சல், அல்சர் குணமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும் ஜீரண மண்டல உறுப்புகளில் சிறப்பு வேலை செய்ய வல்லது கருணை. சீரண சக்தியைத் துரிதப்படுத்தும். அதோடு அந்த உறுப்புகளுக்கும் பலத்தைக் கொடுக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சியில் கிழங்குகளுக்கு அதிகப் பங்கு உள்ளது. ஏராளமான தாதுப் பொருள்கள், எக்கச்சக்கமான வைட்டமின் சத்துகள், நார்ச்சத்துகள் எனச் சத்துகளின் உறைவிடமாகக் கிழங்குகள் இருக்கின்றன. மரவள்ளிக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, சேனைக்கிழங்கு போன்ற கிழங்குகளை வேகவைத்து குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுப்பது சிறந்தது.
குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், உடலுழைப்பு அதிகமில்லாதவர்கள், குடலில் பாதிப்பு இருப்பவர்கள், மூட்டுப் பிரச்னை இருப்பவர்கள் உஷாராக இருக்க வேண்டும். சிலர் சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு என ஏதாவது ஒரு கிழங்கை அதிகம் விரும்பிச் சாப்பிடுவார்கள். அப்படி ஒன்றை மட்டும் சாப்பிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம். புரதச் சத்துகள் நிறைந்த காய்களோடு சேர்த்துக் கிழங்கைச் சாப்பிட்டுப் பழக வேண்டும். இவர்கள் கிழங்கு சாப்பிடலாம், இவர்கள் சாப்பிடக் கூடாது என்ற யாரையும் குறிப்பிட்டு ஒதுக்கி விட முடியாது. சர்க்கரை நோயாளிகள், இதய பாதிப்பு உள்ளவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கிழங்குகள் சாப்பிடுவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்த பிரச்னை உள்ளவர்கள், கிழங்கு விரும்பிகளாக இருக்கும் பட்சத்தில் ஊட்டச்சத்து நிபுணரிடமும், சம்பந்தப்பட்ட நோயின் சிறப்பு மருத்துவரிடமும் ஆலோசனை பெற்று, அதற்கேற்றபடி கிழங்கு சாப்பிடலாம். முதன்முறை சாப்பிட்டு சரும ஒவ்வாமை ஏற்பட்டால், சிலர் அந்தக் கிழங்கை சாப்பிடுவதையே நிறுத்திவிடுவார்கள். அது தவறு. சில கிழங்குகளை நாட்பட நாட்பட தான் நமது உடலும் சருமமும் ஏற்றுக்கொள்ளும். மீண்டும் மீண்டும் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒவ்வாமை தொடர்ந்தால், சரும மருத்துவரை அணுகவும்.
கிழங்குகள் செரிமானம் ஆவதற்கு அதிக நேரமும், அதிக உழைப்பும் தேவைப்படும். இரண்டில் எது குறைந்தாலும் செரிமானத்தில் பாதிப்பு ஏற்படும். கிழங்கு வகைகளைச் சாப்பிட்டவுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். சிறிதளவு சீரகம், பெருங்காயம் சேர்த்து வேக வைக்கப்பட்ட கிழங்குகளைச் சாப்பிடுவது, செரிமானக்கோளாறுகள் ஏற்படாமல் காக்கும். சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது, வேலை செய்வது, உடலுழைப்பைச் சற்று அதிகப்படுத்துவது போன்றவற்றின் மூலம் செரிமானக் கோளாறுகளைத் தவிர்க்கலாம்