×

பதவியேற்புக்கு முன்பே பயணத் திட்டத்தை அறிவித்த மோடி!!

பிரதமர் மோடியின் இந்த ஆண்டிற்கான வெளிநாட்டு சுற்றுப்பயண விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த ஆண்டிற்கான வெளிநாட்டு சுற்றுப்பயண விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மோடி அதிமாக
 

பிரதமர் மோடியின் இந்த ஆண்டிற்கான வெளிநாட்டு சுற்றுப்பயண விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

பிரதமர் மோடியின் இந்த ஆண்டிற்கான வெளிநாட்டு சுற்றுப்பயண விவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது. 

17 வது மக்களவை தேர்தலில் பெறும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிப்பெற்று மீண்டும் அரியணை ஏறுகிறது. இந்த வெற்றியை பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் பல்துறை பிரபலங்களும் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே மோடி அதிமாக வெளிநாடுகளுக்கு சென்றுவருவதாகவும் இதனால் செலவுகள் அதிகமாகின்றன என்றும் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மோடி பிரதமராவதற்கு முன்பே, அவரது வெளிநாட்டு சுற்றுப்பயணம் தொடர்பான அறிக்கையை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஜூன் 15 ஆம் தேதி வரும், கிரிகிஸ்தான் நாட்டில் நடைபெறும் SCO மாநாட்டில் பிரதமர் கலந்துக்கொள்ளவுள்ளாதாகவும், ஜூன் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் ஜப்பானி நடைபெறும் ஜி 20 மாநாட்டிலும், ஆகஸ்ட் கடைசி வாரத்தில் பிரான்ஸ் நாட்டுக்கும் பிரதமர் மோடி பயணம் செய்ய வுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவிற்கும் 3 ஆவது வாரத்தில் அமெரிக்காவிற்கும் பறக்கவிருக்கிறார். இதேபோல் நவம்பர் 4 இல் பாங்காக், நவம்பர் 11 இல் பிரேசில் செல்லவுள்ளார்.