×

ஓய்ந்தது தேர்தல் பரப்புரை!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது. முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். ஸ்டாலின் கொளத்தூரிலும், எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், ஓபிஎஸ் போடியிலும், சீமான் திருவொற்றியூரிலும், கோவையில் கமல்ஹாசனும், டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனல் பறந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சரியாக இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கும்.
 

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது.

முதல்வர் வேட்பாளர்கள் அனைவரும் அவரவர் போட்டியிடும் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். ஸ்டாலின் கொளத்தூரிலும், எடப்பாடி பழனிசாமி எடப்பாடியிலும், ஓபிஎஸ் போடியிலும், சீமான் திருவொற்றியூரிலும், கோவையில் கமல்ஹாசனும், டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும் தங்களது இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.


இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனல் பறந்த சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் சரியாக இரவு 7 மணிக்கு நிறைவடைந்தது. 234 தொகுதிகளிலும் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கும். இனி தேர்தல் வாக்கு பதிவு முடியும் வரையில் சமூக வலைத்தளங்களிலும் பிரச்சாரம் செய்ய தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட வைகளிலும் பிரச்சாரம் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.