×

விறுவிறு வாக்குப்பதிவு.. கடந்த தேர்தலை விட 5% குறைவாம்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் முழு வீச்சில் களமிறங்கின. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறந்தது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்தனர். அதிரடியாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 4ம் தேதி இரவு 7 மணியோடு ஓய்வடைந்தது. இதைத் தொடர்ந்து, இன்று காலை சரியாக 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 234
 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணியில் முழு வீச்சில் களமிறங்கின. தமிழகம் முழுவதும் பிரச்சாரம் அனல் பறந்தது. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சித் தலைவர்கள் பம்பரமாக சுழன்று வாக்கு சேகரித்தனர். அதிரடியாக நடந்து வந்த பிரச்சாரம் கடந்த 4ம் தேதி இரவு 7 மணியோடு ஓய்வடைந்தது.

இதைத் தொடர்ந்து, இன்று காலை சரியாக 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் 234 தொகுதிகளிலும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. காலை முதலே வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க தொடங்கிவிட்டனர். அரசியல் கட்சித் தலைவர்களும் அதிமுக அமைச்சர்களும் நடிகர் மற்றும் நடிகைகளும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 13.80%வாக்குகள் பதிவாகி இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

அதிகபட்சமாக திண்டுக்கல் தொகுதியில் 20.23%, குறைந்தபட்சமாக நெல்லையில் 9.93% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் சென்னையில் 10.58% வாக்குகள் பதிவாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சென்ற நடந்த தேர்தலை ஒப்பிடும் போது காலை நிலவரத்தின் வாக்குப்பதிவு 5% குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.