×

#Ulundurpettai எங்க ஆதரவு அம்மா அரசுக்கு தான்.. அதிமுகவுக்கு சாதகமான உளுந்தூர்பேட்டை!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளன. பெரும்பாலான கணிப்புகள் ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதையே உறுதியாக சொல்கின்றன. அதாவது கிட்டத்தட்ட 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி வென்று ஆட்சியைப் பிடிக்கும் என சொல்லப்படுகிறது. இப்படி இருக்கும் சூழலில் மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அதில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி உளுந்தூர்பேட்டை.
 
அதிமுகவின் குமரகுரு:

உளுந்தூர்பேட்டை தொகுதியை பொறுத்தவரையில் அதிமுகவின் குமரகுருவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. இந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ குமரகுரு தான். கடந்த 30 ஆண்டுகளில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் அதிமுக 4 முறை வெற்றி பெற்று தனது கோட்டையாகவே மாற்றி வைத்துள்ளது. இந்த முறையும் அதிமுகவில் இருந்து குமரகுருவே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுகவில் இருந்து மணிகண்டன் போட்டியிடுகிறார்.

ஆளப்போவது யார்?

உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள முக்கிய பிரச்னைகளாக மக்கள் சொல்லியிருப்பது என்னவென்றால் அரசு கல்லூரி இல்லை, குடிநீர் வசதி மற்றும் சாலை வசதி மேம்படுத்தப்படாதது போன்றவை தான். இந்த முறை உளுந்தூர்பேட்டை தொகுதி மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் என்ற கேள்விக்கு பெரும்பாலானோர் அதிமுகவுக்கே தங்களது ஆதரவை உறுதிப்படுத்தினர். அதற்கு அடுத்த படியாக நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

சர்வேயின் முடிவில், தொடர்ந்து 2 முறை உளுந்தூர்பேட்டை தொகுதியை கைப்பற்றிய அதிமுக எம்.எல்.ஏ குமரகுருவுக்கு தான் இந்த முறையும் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பது தெரிய வந்துள்ளது. நமது இந்த கணிப்பு தேர்தலில் பிரதிபலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..!