×

“ஸ்டாலின் வந்தா தமிழ்நாடே கெத்தா நடக்கும்” – விருகை மக்களின் ஆசை நிறைவேறுமா? #virugambakkam

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனநிலையை அறிந்து வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது விருகம்பாக்கம் தொகுதி. விருகம்பாக்கம் தொகுதியானது 2011ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது. இதுவரை இரு தேர்தல்களை மட்டுமே சந்தித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும், 2016ஆம் ஆண்டு
 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து மக்களின் மனநிலையை அறிந்து வருகிறது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது விருகம்பாக்கம் தொகுதி. விருகம்பாக்கம் தொகுதியானது 2011ஆம் ஆண்டு தான் உருவாக்கப்பட்டது.

இதுவரை இரு தேர்தல்களை மட்டுமே சந்தித்திருக்கிறது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக சார்பில் பார்த்தசாரதியும், 2016ஆம் ஆண்டு அதிமுக சார்பில் விருகை ரவியும் வெற்றிபெற்றுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தோற்ற திமுக வேட்பாளர் தனசேகரனுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதற்குப் பதிலாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா மகன் பிரபாகர்ராஜாவுக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.

அதிருப்தியான தனசேகரன் வேட்பாளரை மாற்ற கோரிக்கை வைத்தார். அதற்குப் பின் சமாதானம் ஆகிவிட்டார். விருகை ரவியும் பார்த்தசாரதியும் இம்முறை களமிறங்குகிறார்கள். குறிப்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் பாடலாசிரியர் சினேகன் போட்டியிடுகிறார். இதனால் இதுவும் நட்சத்திர தொகுதியாக இருக்கிறது.

தொகுதி மக்கள் மனதில் யார் இருக்கிறார் என்பதை அறிய அவர்களிடம் மைக்கை நீட்டினோம். சொல்லிவைத்தாற் போல அனைவரும் ஸ்டாலின், ஸ்டாலின் என உச்சரித்தனர். ஸ்டாலின் வந்தால் தமிழ்நாட்டின் உரிமைகள் மீட்கப்பட்டு கெத்தாக இருக்கலாம் என்று ஒருவர் முன்மொழிந்தார். அதேயே அனைவரும் வழிமொழிந்தனர்.

ஒருசிலர் மட்டுமே அதிமுகவிற்கு வாய்ப்பளிக்கலாம் என்றனர். அடுத்தபடியாக தேமுதிகவுக்கும் மக்கள் நீதி மய்யத்துக்கும் வாய்ப்பளித்திருக்கிறார்கள். தற்போதைய ஆட்சிக்கு அதிகபட்சமாக 10 மார்க்கும் குறைந்தபட்சமாக 5 மார்க்கும் மக்கள் கொடுத்துள்ளனர். (கருத்துக்கணிப்பின் முழு விவகரங்களைக் காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்)