×

ஹாட்ரிக் வெற்றி நிச்சயம் : எதிர்க்கட்சியினரை கதறவிடும் அமைச்சர் வீரமணியின் செல்வாக்கு #Jolarpettai

ஜோலார்பேட்டை தொகுதியில் 2011ல் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 273. 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவின் அமைச்சரான கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் வெற்றி வாகை சூடினார்.அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 82,525. 2011 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஜோலார்பேட்டை இங்கு கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை
 

ஜோலார்பேட்டை தொகுதியில் 2011ல் அதிமுக அமைச்சர் கே.சி. வீரமணி வெற்றி பெற்றார். அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 86 ஆயிரத்து 273. 2016 ஆம் ஆண்டு மீண்டும் அதிமுகவின் அமைச்சரான கே.சி. வீரமணி ஜோலார்பேட்டையில் வெற்றி வாகை சூடினார்.அப்போது அவர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 82,525. 2011 ஆம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட தொகுதி ஜோலார்பேட்டை இங்கு கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதிமுக வெற்றிவாகை சூடியுள்ளது.

2021 சட்டமன்றத் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் வீரமணிமீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து திமுக சார்பாக திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளர் தேவராஜி போட்டியிடுகிறார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர். கருணாநிதி களம் காண்கிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் ஆ. சிவாவும், அமமுக சார்பில் தென்னரசு சாம்ராஜும் போட்டியிடுகின்றனர்.

ஜோலார்பேட்டை தொகுதி மக்களின் குறைகளாக உள்ளது குடிநீர் பிரச்னை, ரேஷன் கடைகளில் கொடுக்கக்கூடிய பொருட்கள் தரமாக இல்லை போன்றவை பிரதானமாக சொல்லப்படுகிறது. அதிமுக கைவசம் கடந்த 10 ஆண்டுகளாக உள்ள ஜோலார்பேட்டை தொகுதி மக்கள் ஆளும் அதிமுகவுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்ணும், குறைந்தபட்சமாக பூஜ்யமும் அளித்துள்ளனர்.

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் நமது கருத்து கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது இங்கு அமைச்சர் கே.சி. வீரமணிக்கு தனிப்பட்ட அளவில் செல்வாக்கு உள்ளது. இங்குள்ள சிறுபான்மையினர், இஸ்லாமியர்கள் உள்பட அனைவரும் இங்கும் அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

மற்ற தொகுதிகளில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைந்துள்ளதால் இஸ்லாமியர்கள் அக்கட்சிக்கு ஆதரவு தெரிவிக்காத நிலையில் இங்கு கே.சி.வீரமணி என்ற தனிமனிதனின் செல்வாக்கு தான் அதிமுக வெற்றிக்கு கூடுதல் பலமாக உள்ளது.அதற்கு அடுத்த இடத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்டவை உள்ளன. ஜோலார்பேட்டை மக்களின் மனநிலை என்ன? தற்போதைய ஆட்சி குறித்த அவர்களின்பார்வை பார்வை என்ன? என்பதை இந்த வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.