×

#komarapalayam ஆளுங்கட்சி மீது அதிருப்தி.. குமாரபாளையத்தை கைப்பற்றுவாரா அமைச்சர் தங்கமணி?

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் கட்சிகளை பீதியில் ஆழ்த்துகின்றன. இருப்பினும், தேர்தல் நேரத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு
 

தமிழகத்தில் வரும் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. பிரச்சாரங்கள் ஒரு புறம் நடந்து கொண்டிருக்கும் சூழலில், கருத்துக் கணிப்புகள் வெளியாகி அரசியல் கட்சிகளை பீதியில் ஆழ்த்துகின்றன. இருப்பினும், தேர்தல் நேரத்தில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதை மனதில் கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில், மக்கள் யாருக்கு ஆதரவு அளிக்கப்போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள நமது டாப் தமிழ் நியூஸ் சேனல் தொகுதி வாரியாக கருத்துக் கணிப்பு நடத்தினோம். அந்த வகையில், இன்று நாம் பார்க்கப்போகும் தொகுதி குமாரபாளையம்.

களம் காணும் வேட்பாளர்கள்:

கடந்த 2011ம் ஆண்டு புதிதாக உருவாக்கப்பட்ட குமாரபாளையம் தொகுதி அதிமுக வசம் இருந்து வருகிறது. 2011, 2016ல் நடந்த தேர்தல்களில் திமுகவை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் தங்கமணி இந்த தொகுதியை கைப்பற்றினார். தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏவான தங்கமணி, வரும் தேர்தலில் அங்கு மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து திமுகவில் இருந்து வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

ஆளப்போவது யார்?

குமாரபாளையம் தொகுதியை பொறுத்தவரையில், அமைச்சர் தங்கமணிக்கான செல்வாக்கு பலமாக இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி பலவீனமாக அமைந்துள்ளது. சாலை பிரச்னையை பிரதானமாக முன்வைக்கும் குமாரபாளையம் தொகுதி மக்கள், நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு கவனிக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

சர்வேயின் முடிவில், குமாரபாளையம் தொகுதி அதிமுகவுக்கே சாதகமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, அமைச்சர் தங்கமணி தான் இந்த தொகுதியை கைப்பற்றுவார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு அடுத்த படியாக திமுகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். நமது இந்த கணிப்பு தேர்தலில் எதிரொலிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்…!