×

#Katpadi அதிமுக வசம் செல்லும் காட்பாடி…செல்வாக்கை இழந்தாரா துரைமுருகன்?!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளையுடன் பரப்புரை முடிவடையவுள்ளது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்ன? உங்கள் ஓட்டு யாருக்கு? ஆகிய கேள்விகளை முன்வைத்து அந்தந்த தொகுதிகளுக்கான களநிலவரத்தை அறிந்துள்ளது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது
 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாளையுடன் பரப்புரை முடிவடையவுள்ளது. இந்த சூழலில் நமது டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் தமிழகம் முழுவதும் பயணித்து தேர்தல் குறித்த மக்களின் மனநிலை என்ன? உங்கள் ஓட்டு யாருக்கு? ஆகிய கேள்விகளை முன்வைத்து அந்தந்த தொகுதிகளுக்கான களநிலவரத்தை அறிந்துள்ளது. அந்த வகையில் இந்த செய்தியில் நாம் பார்க்கப்போவது காட்பாடி தொகுதி…!

சட்டமன்ற தேர்தலில் 12வது முறையாக காட்பாடியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார். காட்பாடி தொகுதியை பொறுத்தவரையில் 1991 ஆம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த கலைச்செல்வி வெற்றிபெற்றுள்ளார். ஆனால் அதன்பிறகு நடந்த 1996 ,2001, 2006, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் துரைமுருகன் வெற்றிக்கனியை மட்டுமே சுவைத்து வந்துள்ளார். காட்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகன் , அதிமுக சார்பில் வி .ராமு, அமமுக சார்பில் ஏ.எஸ்.ராஜா,ஐஜேகே வேட்பாளராக எம்.சுதர்சன், நா.த.க வேட்பாளர் ச. திருக்குமரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். காட்பாடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக ஒரு முறையும் திமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளது.

காட்பாடி தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ துரைமுருகன். இங்குள்ள மக்களின் மிகப்பெரிய குறையாக உள்ளது அவர்களின் அடிப்படை பிரச்னைகள் தான். கடந்த 10 ஆண்டுகளாக துரைமுருகன் எதிர்கட்சி எம்எல்ஏவாக இருந்த நிலையில் அங்கு மக்களுக்கு தேவையான சாலை முதல் குடிநீர் வரை எந்த அடிப்படை பிரச்னைகளை தீர்த்து வைக்கவில்லை என்று தெரிகிறது.

காட்பாடி தொகுதியில் திமுகவுக்கு ஆதரவு பரவலாக இருக்கிறது. இதற்கு காரணம் துரைமுருகனின் தனிப்பட்ட செல்வாக்கு. வன்னியர்கள் சமூகத்தினர் அதிகம் உள்ள காட்பாடியில் இந்த முறை அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றதால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அலை முன்பை விட சற்று உயர்ந்துள்ளது.

இருபெரும் கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி இங்கு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. காட்பாடி தொகுதியை குறித்த மக்களின் எண்ணத்தை முழுமையாக அறிய இந்த வீடியோவை பாருங்கள்…!