×

இந்த தேர்தலில் அதிமுக தோற்றால் என்னவாகும்? ரகசியம் உடைத்த ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன்.

தொண்டர்கள் அனைவருக்கும் பூங்குன்றனின் அன்பான வேண்டுகோள் என்ற பெயரில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், “விரைவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகால ஆட்சி கடந்துவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை என்பதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆனால் தொண்டர்கள் பலர் சோர்வுடனும், சோகத்துடனும் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் வாக்கும் தொண்டர்களுடைய குடும்பத்தினர் வாக்கும் சிதறாமல் கிடைத்தால் தான் தேர்தலில் வெற்றிப்பெறமுடியும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒன்றுபட்டால் உண்டு
 

தொண்டர்கள் அனைவருக்கும் பூங்குன்றனின் அன்பான வேண்டுகோள் என்ற பெயரில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “விரைவில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகால ஆட்சி கடந்துவிட்ட நிலையில் மக்கள் மத்தியில் எதிர்ப்பு இல்லை என்பதே நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. ஆனால் தொண்டர்கள் பலர் சோர்வுடனும், சோகத்துடனும் பயணித்துக்கொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் வாக்கும் தொண்டர்களுடைய குடும்பத்தினர் வாக்கும் சிதறாமல் கிடைத்தால் தான் தேர்தலில் வெற்றிப்பெறமுடியும். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, இணைந்திருந்தால் அதிமுகவுக்கு பலம், என்ற பழமொழிகள் உண்டு. கழகம் இணையததன் வருத்தத்தை திருச்சிக்கு பிறகு இருக்கும் தொண்டர்கள் உணர்ந்து இருக்கின்றனர். மற்றவர்கள் இதனை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு குறைவுதான். தேர்தலுக்கு பின்னராவது புரிந்துகொள்வார்கள் என நம்புகிறேன்.

ஒரு குடும்பத்திலேயே பல பிரச்னை, ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கத்தில் பிரச்னை இருக்காதா? எனக்கு உறுப்பினர் சீட்டுக்கூட தர மறுக்கிறார்கள், என்னுடைய பேட்டி, கட்சிக்கோ, ஆட்சிக்கோ தொண்டர்களுக்கோ எந்தவிதத்திலும் தந்துவிடக்கூடாது என்பதற்காகவே தவிர்த்துவருகிறேன். ஒவ்வொரு தொண்டன் வீட்டிலும் மகளுக்கு கட்சி வேலை வாங்கி தரவில்லை, மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை என்ற ஏக்கம் இருக்கலாம். ஜெயலலிதா இருந்தபோது இருந்த ஜெத்து, கம்பீரம் இப்போது இருக்கிறதா? என்ற சந்தேகம் உங்களுக்கும் உண்டு, எனக்கும் உண்டு. எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என அதிமுக மகளிர் அணியினர் கூறுகின்றனர். ஆட்சி வருவதற்கே ஐடி விங் தான் காரணம் என சொன்னவர்கள் எல்லாரும் தேர்தலில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உழைக்காதவர்களுக்கு பதவி, மாற்று கட்சியில் இருந்து அதிமுகவை கடுமையாக விமர்சித்துவர்களுக்கு அன்றைக்கே பதவி.

தேமுதிகவை புறக்கணித்தது கூட என மனகுமுறல்தான். இருப்பினும் தலைவர்கள் வழியில் நாம் நடக்க வேண்டும், கழகம் வெற்றிப்பெற்றாகவேண்டும். இல்லையேல் என்ன நடக்கும்? என்பதை யாராலும் யூகிக்க முடியாது. 1996 ஆம் ஆண்டு கழகம் தோல்வியை சந்தித்தபோது ஜெயலலிதா இருந்து கட்சியை நிமிர்த்தார். ஆனால் இன்று இருப்பவர்கள் நிமிர்த்துவார்களா என்பது சந்தேகமே! எந்தவித லாபத்தையும் எதிர்பார்க்காமல் கடைமட்ட தொண்டர்கள் அதிமுகவுக்காக உழைத்துக்கொண்டிருக்கின்றனர். 100 ஆண்டுகள் கடந்து இயக்கம் வாழ வேண்டுமென்ற ஜெயலலிதாவின் கனவு நிறைவேற தொண்டர்களும், அவர்கள் குடும்பத்தினரும் இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.