×

அமைச்சரின் சம்பந்தி வீட்டில் புகுந்த ஐ.டி. : கட்டுக்கட்டாக சிக்கிய பணம்!!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் முக்கிய விஐபிகளில் கல்வி நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பணம் பட்டுவாடா, பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளதாக வருமான வரித் துறைக்கு தகவல் சென்றதை அடுத்து அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்
 

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் முக்கிய விஐபிகளில் கல்வி நிறுவனங்கள், வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பணம் பட்டுவாடா, பொருட்களை வழங்குதல் உள்ளிட்ட விவகாரங்களில் முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளதாக வருமான வரித் துறைக்கு தகவல் சென்றதை அடுத்து அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சம்பந்தி தருமபுரி டிஎன்சி இளங்கோவனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

பென்னாகரம் சாலையில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் பள்ளி தருமபுரி நகரில் டிஎன்சி நிதி நிறுவன அலுவலகங்கள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கம் குறித்த விவரங்கள் நேற்று வெளியாகவில்லை.

இந்நிலையில் சென்னை தி.நகரில் பிரபல தனியார் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை செய்து வருகின்றனர். இதில் கணக்கில் வராத ஆறு கோடி ரூபாய் பறிமுதல் என தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பிற்பகல் முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில் இன்னும் பல இடங்களில் ரெய்டு நடந்து வருகிறது. டிஎன்சி இளங்கோவன் தமிழ் திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளராக உள்ளார். அதேபோல் தனியார் பள்ளி கூட்டமைப்பு மாநில செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.