×

ராஜாஜி முதல் ஸ்டாலின் வரை… முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தவர்கள் யார்? யார்?

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர போராடிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு வழியாக அமர்த்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்கிறார் ஸ்டாலின். இதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸும் சரி எடப்பாடி பழனிசாமியும் சரி அவர்கள் முதலமைச்சர் ஆவார்கள் என்று அவர்களே நினைத்துப் பார்க்க மாட்டார்கள். களத்தில் கீரியும் பாம்புமாகச் செயல்பட்டாலும் தேர்தல் முடிந்த பின் பரஸ்பரம் வாழ்த்து
 

தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியிருக்கின்றன. பல வருடங்களாக ஆட்சிக் கட்டிலில் அமர போராடிக் கொண்டிருந்த திமுக தலைவர் ஸ்டாலினை ஒரு வழியாக அமர்த்தியிருக்கிறார்கள். ஜெயலலிதாவுக்குப் பின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சர் அரியணையில் அமர்கிறார் ஸ்டாலின்.

இதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஓபிஎஸ்ஸும் சரி எடப்பாடி பழனிசாமியும் சரி அவர்கள் முதலமைச்சர் ஆவார்கள் என்று அவர்களே நினைத்துப் பார்க்க மாட்டார்கள். களத்தில் கீரியும் பாம்புமாகச் செயல்பட்டாலும் தேர்தல் முடிந்த பின் பரஸ்பரம் வாழ்த்து கூறிக் கொள்வதும் நன்றி தெரிவித்துக் கொள்வதும் இந்தியாவில் பின்பற்றப்படும் மிக முக்கியமான ஜனநாயகப் பண்பு. உலகில் வேறு எங்கும் இல்லாத இந்தப் பண்பு இந்தியாவில் இருக்கிறது.

ஸ்டாலின் ஆட்சியமைத்ததற்கு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து கூறியிருக்கிறார். அதற்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின், எதிர்க்கட்சியாக எங்களுக்கு ஆலோசனைகள் வழங்குங்கள்; அவற்றைக் கேட்டு செயல்பட தயாராக இருக்கிறோம் என்று சொல்ல்லியிருக்கிறார். திமுக பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை என்ற செய்தி வெளியாகிய உடனே அரசு அதிகாரிகள் ஆழ்வார்பேட்டையிலுள்ள ஸ்டாலின் வீட்டுக்குப் படையெடுத்தனர்.

தலைமைச் செயலர் ராஜிவ் ரஞ்சன், டிஜிபி திரிபாதி, சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து வழங்கி ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லியிருக்கின்றனர். நாளை திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் எப்போது பதவியேற்பது, அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் எளிமையாகப் பதவியேற்க முடிவு செய்திருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டின் 8ஆவது முதலமைச்சராக மே 7ஆம் தேதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வந்த வண்ணமே உள்ளன.

1952ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின் சென்னை மாகாணத்தின் முதல் சட்டப்பேரவை மார்ச் 1ஆம் தேதி அமைக்கப்பட்டது. அப்போது முதலமைச்சராகப் பதவியேற்ற ராஜாஜி 1954 வரை தொடர்ந்தார். அதற்குப் பின் 1957ஆம் ஆண்டு வரை காமராஜர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளையும் காமாரஜர் வெற்றிக்கரமாக நிறைவு செய்தார். 1962ஆம் ஆண்டில் மீண்டும் பொறுப்பேற்றாலும் 1963ஆம் ஆண்டு பக்தவச்சலத்திற்குக் கைமாறியது. அவர் 1967ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார்.

1967ஆம் ஆண்டு முதலமைச்சரானார் திமுக முன்னாள் தலைவர் சி.என். அண்ணாதுரை. ஆட்சிக்கு வந்த உடனே சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் முதலமைச்சர் அண்ணாதுரை. அவரைத் தொடர்ந்து முதலமைச்சரான கருணாநிதி ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து 1977ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்ஜிஆர் 1987ஆம் ஆண்டு வரை அப்பதவியில் இருந்தார். அவருக்குப் பிறகு அவரது மனைவி ஜானகி வெறும் 23 நாட்கள் மட்டும் முதலமைச்சர் நாற்காலியை அலங்கரித்தார். ஜானகி தமிழ்நாட்டின் நான்காவது முதலமைச்சராவார். தொடர்ந்து ஐந்தாவது முதலமைச்சராக அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் ஆறு முறை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஜெயலலிதாவிற்கு எப்போதெல்லாம் பதவி பறிபோகிறதோ அப்போதெல்லாம் ஓபிஎஸ்ஸிடம் முதலமைச்சர் பதவியைக் கொடுப்பார். அவ்வாறாக 2000, 2014ஆம் ஆண்டுகளில் ஓபிஎஸ் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் 2016ஆம் ஆண்டு 3ஆவது முறையாகப் பொறுப்பேற்று 71 நாட்கள் முதலமைச்சராக இருந்தார்.

அதற்குப் பின் சசிகலாவால் எடப்பாடி பழனிசாமி 7ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்று இன்றோடு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் 8ஆவது முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.