×

அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளர்கள் லிஸ்ட்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்கள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அத்துடன் அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பெற்று எதிர் கட்சியாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் தமிழக அரசியல் களத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளனர். குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஐ பெரியசாமி அதிக வாக்குகளில் வாக்கு வித்தியாசத்தில்
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்கள் பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அத்துடன் அதிமுக கூட்டணி 75 இடங்களைப் பெற்று எதிர் கட்சியாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் தமிழக அரசியல் களத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளனர்.

குறிப்பாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு ஐ பெரியசாமி அதிக வாக்குகளில் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வேட்பாளராக மாறியுள்ளார். ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 82 வாக்கு வித்தியாசத்தில் அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்துள்ளார். அதேபோல் ஐ .பெரியசாமிக்கு அடுத்தபடியாக திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரை எ.வ. வேலு 94 ஆயிரத்து 673 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

இவர்களுக்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் 93 ஆயிரத்து 802 வாக்குகள் பெற்று வாக்குகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நேரு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 515 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் அதிமுக வேட்பாளர் பத்மநாபனை விட 81 ஆயிரத்து 283 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது கவனிக்கத்தக்கது.

இவர்களுக்கு அடுத்தபடியாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 70 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை மண்ணைக் கவ்வ செய்துள்ளார்.அதன்படி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற முதல் ஐந்து வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் திமுகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.