×

திமுக கூட்டணி 110; அதிமுக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை!

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 110- இடங்களிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளும்
 

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடந்து முடிந்தது. கடந்த தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட ஐந்து முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் திமுக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதில் திமுக 110- இடங்களிலும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளும் இடம்பெறும்.

அதிமுக கூட்டணி 77 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பாமக, பாஜக ஆகியவை இடம்பெறும். கோவை தெற்கில் கமல் ஹாசன் முன்னிலை வகிக்கும் நிலையில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் முன்னிலை வகிக்கிறது.

ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவு 2வது சுற்றில் 570 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கு பின்னடைவு.

ராயபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் மூர்த்தி முன்னிலை வகிக்கிறது. அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார் பின்னடைவு

மத்திய சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் உள்ளார்.