×

’முதல்வர்’ஆனார் எடப்பாடி பழனிச்சாமி! தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

1,60,531 வாக்குகள் பெற்று தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி தொகுதியில் 92 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 67 ஆயிரத்து, 823 வாக்குகள் பெற்றிருக்கிறார். நெருக்கடிக் காலங்களில் கொங்கு மண்டலத்தில் இருந்து இதுவரை மூன்று பேர் முதல்வராகி இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா சுப்பராயன், ராஜாஜி, எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகிய 3 பேரும் நெருக்கடியான
 

1,60,531 வாக்குகள் பெற்று தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. எடப்பாடி தொகுதியில் 92 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சம்பத்குமார் 67 ஆயிரத்து, 823 வாக்குகள் பெற்றிருக்கிறார்.

நெருக்கடிக் காலங்களில் கொங்கு மண்டலத்தில் இருந்து இதுவரை மூன்று பேர் முதல்வராகி இருக்கிறார்கள். ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பா சுப்பராயன், ராஜாஜி, எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகிய 3 பேரும் நெருக்கடியான காலங்களில் தமிழக முதல்வர் பதவியில் அமர்ந்து சிறப்பு சேர்த்தனர். இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி தன் தொகுதி மக்களுக்கு எந்த விதத்தில் நம்பிக்கையாக நடந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக 92 ஆயிரத்து 708 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றதே சாட்சியாக இருக்கிறது.

தமிழகத்தின் முதல் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் என்றால் இரண்டாவது நெற்களஞ்சியம் எடப்பாடி தொகுதி என்று சொல்லலாம். இந்த தொகுதியில் விவசாயமும் விசைத்தறி, கைத்தறி தொழிலும் தான் முக்கியமான இடத்தை வகிக்கின்றன. இதில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. தொகுதியில் வெள்ளாள கவுண்டர்கள், பட்டியலினத்தவர் என பல்வேறு சமூகத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தொகுதியில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இம்முறை வெற்றி பெற்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இதுவரை இத்தொகுதி எடப்பாடி தொகுதியில் நான்கு முறை வெற்றி பெற்றிருக்கிறார்.

கடந்த 2016 இல் நடந்த தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி 98 ஆயிரத்து 703 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாமக வேட்பாளர் என். அண்ணாதுரை 56 ஆயிரத்து 568 வாக்குகள் பெற்று தோல்வியை சந்தித்தார். திமுக வேட்பாளர் பி.ஏ. முருகேசன் 55 ஆயிரத்து 149 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் முதல்வராகவும் இருந்த எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் இத்தொகுதியில் களமிறங்கினார். திமுக வேட்பாளர் சம்பத் குமார், அமமுக பூக்கடை சேகர், மக்கள் நீதி மய்யம் தாசப்பராஜ், நாம் தமிழர் கட்சி ஸ்ரீ ரத்னா ஆகியோரும் களமிறங்கினர் . இதில் எடப்பாடி பழனிச்சாமி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார்.