×

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி!

விழுப்புரம் செஞ்சி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் சந்தோஷ்(14). இவர் அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த சந்தோஷ், நேற்று நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள தனியார் விவசாய கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக படியில் இருந்து
 

விழுப்புரம்

செஞ்சி அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்து 8ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள தென்பாலை பகுதியை சேர்ந்தவர் சாம்பசிவம். இவரது மகன் சந்தோஷ்(14). இவர் அங்குள்ள பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் இருந்து வந்த சந்தோஷ், நேற்று நண்பர்களுடன் வீட்டின் அருகே உள்ள தனியார் விவசாய கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.

அப்போது, எதிர்பாராத விதமாக படியில் இருந்து சந்தோஷ் கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், அவர் தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கத்தி கூட்டலிட்டு உள்ளனர். இதனால் அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று கிணற்றில் மூழ்கிய சிறுவன் சந்தோஷை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.