×

திருமண உதவித்தொகை வழங்க லஞ்சம் பெற்ற பெண் அதிகாரி கைது

விழுப்புரம் விழுப்புரத்தில் திருமண உதவி தொகை வழங்க 1,500 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைதுசெய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தீர்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அவரது மனுவை பரிசீலனை செய்ய ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டுமென,
 

விழுப்புரம்

விழுப்புரத்தில் திருமண உதவி தொகை வழங்க 1,500 ரூபாய் லஞ்சம் பெற்ற சமூக நலத்துறை பெண் அலுவலரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைதுசெய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த தீர்த்தபுரம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம். இவர் தனது மகளுக்கு திருமண உதவித்தொகை பெறுவதற்காக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் சமூக நலத்துறை அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார். அப்போது, அவரது மனுவை பரிசீலனை செய்ய ஆயிரத்து 500 ரூபாய் லஞ்சம் வழங்க வேண்டுமென, சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயலட்சுமி கேட்டுள்ளார்.

இதனை விரும்பாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார். அவர்களது ஆலோசனையின் பேரில் இன்று ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை ஜெயலட்சுமியிடம் வழங்கினார். அப்போது, அலுவலகத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஜெயலட்சுமியை கையும் களவுமாக கைதுசெய்தனர். தொடர்ந்து, அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.